நாட்டில் என்ன நடந்தாலும் அதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் 1930-ல் இந்து மதத்தை விட்டு வெளியேறும் முடிவை எடுக்க வேண்டியிருந்தது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித்தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞர் ஜெய்தேவ் கெய்க்வாட் எழுதிய பாபாசாகேப் அம்பேத்கர் பற்றிய புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், அம்பேத்கர் தனது வாழ்நாள் முழுவதும் அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்பியவர். பெண்களின் சம உரிமைக்காக போராடியவர் என்று சரத் பவார் கூறியுள்ளார்.
#Sadhguru_not_welcome – இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் என ஓமனில் ஜக்கி வாசுதேவுக்கு எதிர்ப்பு
1930-ல் நாசிக்கில் உள்ள காலாராம் கோவிலில் தலித்துகள் நுழைவதற்காக சத்தியாகிரகத்தைத் தொடங்கியபோது, அம்பேத்கர் அவர்கள் ‘சதுர்வர்ண’ அமைப்பில் (இந்து சமூகத்தின் பண்டைய படிநிலை அமைப்பு) நம்பிக்கை இல்லை என்பதை எழுத்துப்பூர்வமாக எழுதுமாறு பங்கேற்பாளர்களிடம் கேட்டார். இந்து மதத்தில் உள்ள தீண்டாமையை ஒழிக்கப் பாடுபட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“டாக்டர் அம்பேத்கருக்கு இருந்தது ஒரே ஒரு வலிதான். அதனால்தான் கடைசியில் அவர் ஒரு முடிவை எடுக்க வேண்டியதாயிற்று நாட்டில் என்ன நடந்தாலும் அதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால்தான், அவர் இந்து மதத்தை விட்டு வெளியேறி புத்த மதத்தை தழுவினார் என்று சரத் பவார் கூறியுள்ளார்.
“தலித்துகளுக்கான அரசியல் இடஒதுக்கீடு குறித்து மகாத்மா காந்தி அவர்கள் `புனே ஒப்பந்தம்’ செய்தபோது அம்பேத்கர் அவர்களுடன் உரையாடினார். சில விஷயங்களில், அவர் (காந்தியுடன்) உடன்பட்டார். ஆனால் சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தன. இந்த விஷயங்களுக்குப் பிறகு, பாபாசாஹேப் ஒரு முடிவுக்கு வந்தார், அக்டோபர் 13, 1935 அன்று, அவர் ஒரு இந்துவாக பிறந்தாலும் இந்துவாக சாகமாட்டேன் என்று அறிவித்து புத்த மதம் தழுவினார்” என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித்தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
Source: Thenewindianexpress
அண்ணாமலைக்கு பேசுற தகுதியே கிடையாது Vanchi Nathan Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.