Aran Sei

‘என்னைத் தொடாதே, நீ தீண்டத்தகாதவர்’ எனக்கூறிய இந்து மத போதகர்: கைது செய்ய வேண்டுமென நெட்டிசன்கள் கோரிக்கை

ரு நபரை ‘தீண்டத்தகாதவர்’ என்று அழைத்த ஒரு இந்து மத போதகரை கைது செய்ய நெட்டிசன்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

அந்த காணொளியில், பண்டிட் தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி எனும் இந்து மத போதகர், அவரது உரையைக் கேட்டு கொண்டிருந்த கூட்டத்திலிருந்து ஒரு நபரை அழைக்கிறார். அந்த மனிதர் மத போதகரின் பாதங்களைத் தொட முயன்றபோது, திரேந்திர கிருஷ்ண சாஸ்திரி பின்னால் சாய்ந்து, ‘என்னைத் தொடாதே, நீ தீண்டத்தகாதவர்’ என்று கூறியுள்ளார்.

நெட்டிசன்கள் இந்த அப்பட்டமான பாரபட்சமான செயலுக்கு கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளனர். பண்டிட் தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

அந்த வகையில் #ArrestDhirendraShastri என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது.

Source : indiatoday

Nenjukku Needhi I கை கொடுத்தா தீட்டு, கை கொடுக்க கூடாது I VCK Sanga Tamizhan I Jamadagni

‘என்னைத் தொடாதே, நீ தீண்டத்தகாதவர்’ எனக்கூறிய இந்து மத போதகர்: கைது செய்ய வேண்டுமென நெட்டிசன்கள் கோரிக்கை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்