Aran Sei

“மது அருந்துபவர்களுக்கு பெண்களை திருமணம் செய்து வைக்காதீர்கள்” – பாஜக அமைச்சர் கவுஷல் கிஷோர் கருத்து

குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு உங்கள் வீட்டு பெண்களை திருமணம் செய்து கொடுக்காதீர்கள். குடிப்பழக்கம் உள்ள ஒரு அதிகாரியைவிட, அந்தப் பழக்கம் இல்லாத ஒரு ரிக்ஷாக்காரர் அல்லது கூலித்தொழிலாளி நல்ல மாப்பிள்ளைதான் என்று ஒன்றிய அரசின் அமைச்சர் கவுஷல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் லம்புவா சட்டசபை தொகுதியில் நடைபெற்ற ஒரு போதைப்பழக்க மீட்பு நிகழ்ச்சியில் ஒன்றிய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார இணையமைச்சர் கவுஷல் கிஷோர் கலந்து கொண்டார்.

கஞ்சா மீதான தடையை நீக்குவது தேவையா? – ஜெகதீசன் சைவராஜ்

எனது மகன் ஆகாஷ் கிஷோருக்கு அவனது நண்பர்களால் மதுப்பழக்கம் ஏற்பட்டது. அதனால் அவனை ஒரு போதை அடிமைகள் மீட்பு மையத்தில் சேர்த்தோம். அவன் அந்தப் பழக்கத்திலிருந்து மீண்டுவிட்டதாகக் கருதி, 6 மாதங்கள் கழித்து திருமணம் செய்துவைத்தோம். ஆனால் திருமணத்துக்குப் பின் அவன் மீண்டும் குடிக்கத் தொடங்கினான். அதனாலேயே இறந்தும் போனான். 2 ஆண்டுகளுக்கு முன்பு அவன் இறந்தபோது என் பேரனுக்கு 2 வயதுகூட ஆகவில்லை.

‘ஒரு குடிகாரரின் ஆயுள் ரொம்ப குறுகியது. நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவும், என் மனைவி ஒரு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துமே எங்கள் மகனை காப்பாற்ற முடியவில்லை. அப்படி இருக்கும்போது, ஒரு சாதாரண மனிதரால் எப்படி தங்கள் பிள்ளையைக் காப்பாற்ற முடியும்? நான் என் மகனை காப்பாற்றத் தவறியதால் என் மருமகள் விதவை ஆகிவிட்டார்.

மது குடியுங்கள், கஞ்சா குடியுங்கள், புகையிலை சாப்பிடுங்கள், ஆனால்… – பாஜக எம்.பி சர்ச்சை பேச்சு

தயவுசெய்து, உங்கள் மகள்கள், சகோதரிகளுக்கு இந்த நிலை வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு உங்கள் வீட்டு பெண்களை திருமணம் செய்து கொடுக்காதீர்கள். குடிப்பழக்கம் உள்ள ஒரு அதிகாரியைவிட, அந்தப் பழக்கம் இல்லாத ஒரு ரிக்ஷாக்காரர் அல்லது கூலித்தொழிலாளி நல்ல மாப்பிள்ளைதான்.

நம் நாட்டில் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து நடந்த 90 ஆண்டு போராட்டத்திலேயே 6.32 லட்சம் பேர்தான் இறந்தனர். ஆனால் போதைப்பழக்கத்தால் ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சம் பேர் செத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, போதைப்பழக்கத்தின் பாதிப்பு குறித்து மாணவப் பருவத்திலேயே, பள்ளி காலைப் பிரார்த்தனையின்போது விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Source : indiatoday

அ.மலைக்கு டைம் சரியில்ல |அமர்பிரசாத் கிண்டுற களி |கம்பி எண்ணப்போகும் அண்ணாமலை |

“மது அருந்துபவர்களுக்கு பெண்களை திருமணம் செய்து வைக்காதீர்கள்” – பாஜக அமைச்சர் கவுஷல் கிஷோர் கருத்து

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்