பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சனாதனத்தை தோலுரித்த வள்ளுவர் பற்றியும் தமிழ் தொண்டாற்றிய ஜீ யூ போப் பற்றியும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பாடம் எடுக்க வேண்டாம் என்று மக்களவை சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் லோதி எஸ்டேட் பகுதியில் டெல்லி தமிழ் கல்வி கூட்டமைப்பின் (Delhi Tamil Education Association – DTEA) சீனியர் செகண்டரி பள்ளியில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர், பிரிட்டிஷாரின் கிழக்கு இந்திய கம்பெனியும், ஜி.யு.போப் போன்ற மிஷனரிகளும் திருக்குறளின் பக்தி என்ற ஆன்மாவை வேண்டுமென்றே மறைத்துள்ளனர்.
திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ஜி.யு.போப். அவருடைய மொழிபெயர்ப்பே இன்றளவிலும் கொண்டாடப்படுகிறது. ஆனால் அந்த மொழிபெயர்ப்பு காலனி ஆதிக்க மனோபாவத்துடன் இந்தியாவின் ஆன்மிக ஞானத்தை சிறுமைப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவின் சிறந்த ஆன்மிகத்தன்மையை சிதைக்க முயன்றனர். அவர்கள் இந்திய வரலாறு, இந்திய கலாச்சாரத்தை சிதைத்து அதனை நிறைவேற்றினர். அதனால், இளைஞர்கள் காலனி ஆதிக்க மனோபாவத்துட;ன் மொழிபெயர்க்கப்பட்ட பண்டைய தமிழ் இலக்கிய புத்தகங்களைப் புறக்கணிக்க வேண்டும். மாறாக அசல் புத்தகத்தின் சாராம்சத்தை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.
திருக்குறளை இப்போது ஏதோ வாழ்வியல் நெறிகள் என்பது போல் மட்டும் குறைத்து மதிப்பிட்டு வைத்திருக்கின்றனர். ஆனால் அது ஒரு இதிகாசம். அதில் நித்திய ஆன்மிகத்தின் ஆன்மா இருக்கிறது. முதல் திருக்குறளில் உள்ள ஆதி பகவன் என்ற வார்த்தை ரிக் வேதத்தில் இருந்து பெறப்பட்டது. அது இந்திய ஆன்மிகத்தின் மையப்புள்ளி. ஆனால் அதன் ஆன்மாவை ஜி.யு போப் வேண்டுமென்றே தனது மொழிபெயர்ப்பில் சிதைத்துள்ளார். ஆதிபகவன் என்பதை அவர் வெறும் முதன்மைக் கடவுள் (Primal Deity) என்று மட்டும் ஜி.யூ.போப் குறிப்பிட்டிருக்கிறார் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று சனாதனத்தை தோலுரித்த வள்ளுவர் பற்றியும், 40 ஆண்டுகள் தமிழ் தொண்டாற்றிய ஜீ யூ போப் பற்றியும் பாடம் எடுக்கும் ஆளுநரே,
சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் – ஜேஎன்யு துணை வேந்தர் சாந்திஸ்ரீ பண்டிட்
கடவுள் வாழ்த்தே இல்லாமல் இந்திய அரசியல் சாசனம் ஏன் உருவாக்கப்பட்டது என்பதை படித்துப்பாருங்கள். ஆன்மீகத்தின் பெயரால் வெறுப்பை விதைப்பவர்களை வள்ளுவர் மனிதனாகவே மதிப்பதில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். உளறல்களை நிறுத்துங்கள் என்று மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.
Kallakurichi Sakthi School Accused Released in Bail – kallakurichi issue update | Deva’s Update 15
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.