பாதிப்புகளுக்கு மனித முகம் உண்டு என்பதால், எந்தவொரு முடிவை எடுக்கும் முன், கண்மூடித்தனமாக விதிகளைப் பின்பற்றாதீர்கள் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார்.
முடிவுகளை எடுக்கும் முன் சமூக பொருளாதார காரணிகள் மற்றும் சமூகத்தில் ஏற்படும் தாக்கத்தை எடை போட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், “மக்கள் உடனடி நூடுல்ஸ் போல, உடனடி நீதியை எதிர்பார்க்கின்றனர். ஆனால், உடனடி நீதியில் நாம் கவனம் செலுத்தினால், உண்மையான நீதி பலியாகிவிடும்” என்று கூறியுள்ளார்.
மேலும் மக்களின் உரிமைகள் நீதிமன்றங்களால் பாதுகாக்கப்படும் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். நீதித்துறையின் செயல்பாட்டை எவ்வாறு மேம்படுத்துவது, மக்களைச் சென்றடைவது மற்றும் அவர்களின் நீதித் தேவைகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது குறித்து சிந்திக்க வேண்டியது அவசியம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றங்களில் பயன்படுத்தப்படும் மொழி குறித்து பேசிய நீதிபதி ரமணா, “ஒரு சாதாரண குடிமகனால் நீதிமன்றத்தின் நடைமுறைகள், செயல்பாடுகள் மற்றும் பயன்படுத்தப்படும் மொழி ஆகியவற்றுடன் தொடர்புபடுத்திக் கொள்ள முடிவதில்லை. எனவே, பொது மக்களை நீதி வழங்கல் செயல்பாட்டின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
“வழக்கில் தொடர்புடையவர்கள் வழக்கின் முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்து புரிந்து கொள்ள வேண்டும். அது திருமணத்தில் மந்திரங்களை உச்சரிப்பது போல இருக்கக் கூடாது. அது நம்மில் பலருக்கு புரியாது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதித்துறை நிறுவனங்களை வலுப்படுத்துவதே தனது முதன்மையான முன்னுரிமை என்று சுட்டிக்காட்டிய நீதிபதி ரமணா, “ சட்டத்தின் ஆட்சியில் நிலைத்திருக்கும் ஜனநாயயக்திற்கு நீதித்துறை வலுப்படுத்துவது அவசியம். தலைமை நீதிபதியாக பதவி வகித்த கடந்த ஓராண்டில், நாட்டின் சட்ட அமைப்பை பாதிக்கும் பல்வேறு பிரச்னைகளை முன்னிலைப்படுத்தி வருகிறேன்.
“மாறிவரும் சமூக தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நாம் கவனமாக கவனிக்க வேண்டும். உலகம் மிக வேகமாக நகர்கிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் இந்த மாற்றத்தை நாம் காண்கிறோம். மேலும், கிரிக்கெட்டின் வடிவம் 5 நாள் டெஸ்ட் போட்டியிலிருந்து 20 ஓவர் போட்டியை நோக்கி நகர்ந்துள்ளது.
3 மணி நேரத் திரைப்படத்தை விட குறுகிய கால பொழுதுபோக்கிற்கான முன்னுரிமை அதிகரித்துள்ளது. ஃபில்டர் காபியில் இருந்து, இன்ஸ்டன்ட் காபிக்கு மாறிவிட்டோம். இந்த இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் காலத்தில், மக்கள் உடனடி நீதியை எதிர்பார்க்கின்றனர். ஆனால், உடனடி நீதிக்காக பாடுபட்டால் உண்மையான நீதி பலியாகும் என்பதை அவர்கள் உணரவில்லை என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார்.
Source: The New Indian Express
தனியார்மயத்தினால் கொழுக்கும் முதலாளிகள் –
அதிர்ச்சியளிக்கும் ஆக்ஸ்பாம் அறிக்கை
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.