Aran Sei

அரசியல் எதிரிகளை பணிய வைக்க புலனாய்வு அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது – தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கருத்து

Image Credits: DNA India

விசாரணை அமைப்புகளை எதிர்கொள்ளும்போது அரசியல் அதிகாரிகள் சரணடைவார்கள் என்ற கருத்தைப் பாஜக கொண்டிருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

அமலாக்கத்துறை போன்ற ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்துவது தொடர்பாக கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

காஷ்மீர் பண்டிட்களுக்கு மகாராஷ்டிரா அரசு உறுதியாக நிற்கிறது – மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்ரே

”அவர்கள் செய்வது சரியல்ல. அரசியல் எதிரிகள் சரணடைவார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். நினைத்து கொள்ளுங்கள், எனக்கு அமலாக்கத்துறையிடம் இருந்து அறிவிப்பைப் பெற்றேன். அடுத்த நாள் காலை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு செல்ல முடிவு செய்தேன். ஆனால், அதிகாரிகள் என் வீட்டிற்கு வந்து அலுவலத்திற்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.” என்று சரத் பவார் தெரிவித்துள்ளார்.

”நாம் வலுவாகவும் உண்மையாகவும் இருந்தால், அடக்குமுறையைத் கண்டு பயப்படத் தேவையில்லை. நாம் அவர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
பாஜகவின் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய அவர், அதன் தலைவர்கள் வாழ்க்கையில் எந்த போராட்டங்களையும் எதிர்கொள்ளவில்லை என்றும், அவர்களை போலவே மற்றவர்களும் ஒருபோதும் எந்த சிரமங்களையும் எதிர்கொண்டதில்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர்: குறிவைக்கப்பட்ட தாக்குதல்களை கையாள ஒன்றிய அரசு பயன்படத்திய திட்டம் தோல்வி – சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல்

சரத் பவாரின் கட்சியைச் சேர்ந்த இரண்டு தலைவர்கள் அனில் தேஷ்முக் மற்றும் நவாப் மாலிக் மீது பணமோசடி வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு தற்போது சிறையில் உள்ளனர்.
அதே நிகழ்ச்சியில் பேசிய சிவசேனா கட்சியின் மாநிலங்களவை தலைவர் சஞ்சய் ராவத், ”மகாராஷ்டிராவில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் அரசு தொடர்ந்தால், நாட்டின் நிலைமையை மாற்றும் அதிகாரம் மாநிலத்திற்கு இருக்கும் கூறியுள்ளார்”

Source: NDTV

Cook With Comali பார்த்தா குழந்தை பிறக்குமா? Dr Shalini Interview | Venkatesh Bhat Troll | Pregnancy

அரசியல் எதிரிகளை பணிய வைக்க புலனாய்வு அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது – தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கருத்து

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்