Aran Sei

ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறுமாறு குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க திமுக முடிவு – ப.சிதம்பரம் ஆதரவு

மிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவரிடம் மனு அளிப்பதற்காக கூட்டணிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் திமுக சார்பில் கையெழுத்து பெறப்பட்டு வருகிறது. இதற்கு தனது ஆதரவை தருவதாக மூத்த காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதல், அவர் பங்கேற்கும் நிகழ்வுகளில் திராவிடம், புதிய கல்விக் கொள்கை, சனாதனம், ஆரியம், பட்டியலின மக்கள், திருக்குறள் ஆகியவை குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

திமுக ஆட்சிக்கு எதிராக பிரசாரம் செய்யவா ஆளுநருக்கு ஊதியம் தரப்படுகிறது? – திமுகவின் நாளேடான முரசொலி கண்டனம்

அரசியலமைப்பு சட்டப்படி பதவியேற்றுக் கொண்ட ஆளுநர், அதற்கு எதிரான கருத்துகளை வெளியிடுவதாக சமீபத்தில் திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் அறிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு திரும்ப பெற வலியுறுத்தி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் மனு அளிக்க திமுக திட்டமிட்டுள்ளது.

இதற்கு வலு சேர்க்கும் வகையில், கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், கட்சி பொருளாளருமான டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.

சனாதனத்தை தோலுரித்த வள்ளுவர் பற்றி எங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டாம் – தமிழக ஆளுநருக்கு சு.வெங்கடேசன் எம்.பி., கண்டனம்

அதில், “தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக் கோரி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து மனு அளிக்க திமுக முடிவெடுத்துள்ளது. திமுக மற்றும் இதே கருத்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வந்து, குடியரசுத் தலைவருக்கு அளிக்கும் மனுவை நவ.3-ம் தேதிக்கு (இன்று) முன்பாக படித்துப் பார்த்து கையெழுத்திடும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவாலயம் வந்து கடிதத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர். நேற்று அறிவாலயம் வந்த மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ, ‘‘அரசியல் சட்டத்தின் முகவுரையில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு எதிராக ஆளுநர் பேசுகிறார்’’ என்று தெரிவித்துள்ளார்.

நான் பேசுவது தான் வரலாறு என்று திரும்பத் திரும்பச் சொன்னால் என்ன செய்வது?” : ஆளுநரை விமர்சித்த முரசொலி தலையங்கம்

இந்நிலையில், தமிழக ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டி திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திடும் மனுவை ஆதரிக்கிறேன் என ப.சிதம்பரம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறுமாறு குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க திமுக முடிவு – ப.சிதம்பரம் ஆதரவு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்