சனாதன தர்மம் குறித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பேசியிருப்பது அரசியலமைப்புக்கு எதிரானது என்று திமுக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கட்சியின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர். பாலு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ”இந்த பாரதத்தை (இந்தியாவை) சனாதன தர்மம் தான் உருவாக்கியது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பேசியுள்ளார். இது அவர் வகிக்கும் அரசியல்சாசன பதவிக்கு நல்லதல்ல” என்று கூறியுள்ளார்.
ஆளுநரின் உரை அரசியலமைப்பின் ஸ்தாபகக் கொள்கைகளை கிழித்தெறிவதற்கான முயற்சி என்று குற்றம்சாட்டியுள்ள டி.ஆர். பாலு, குற்றம்சாட்டியுள்ளார்.
”மதசார்பற்ற கொள்கைகளை பரப்ப வேண்டிய ஆளுநர் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு, மற்ற சமூகங்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்கிறார். உண்மையில், பொது மன்றத்தில் வன்முறையைத் தூண்டுகிறார்.” என்று கூறியுள்ளார்.
சில நகரங்களில் அமெரிக்கா குண்டு வீசித் தாக்கியது குறித்து ஆளுநர் பேசியிருப்பது உள்நாட்டில் கலவரத்தை உருவாக்கும் ஒரு முயற்சி. மாநிலத்தில் அச்சத்தை ஏற்படுத்த அவர் இது போன்ற கருத்துக்களை தெரிவிக்கிறார் என்ற அச்சம் உள்ளது என்று டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.
சனாதன தர்மம் ஒவ்வொரு சமூகத்திற்கு தனித்தனியான விதிகளை ஊக்குவித்தது. ஆனால், சட்டத்தின் முன் அனைவரும் சமம். எதிர்காலத்தில் இது போன்ற கருத்துக்களை ஆளுநர் தெரிவிக்கக் கூடாது என்று டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.
Source: The Hindu
மதுரை ஆதீனத்திற்கு வாத்தி ரெய்டு | கொந்தளித்த Actor Vijay ரசிகர்கள் | BJP | VHP | Aransei Explainer
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.