தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது 2 ஆம் கட்ட ஊழல் புகார்ப் பட்டியலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக நிர்வாகிகள் வழங்கியுள்ளனர்.
இது தொடர்பாக, திமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (பிப்பிரவரி 19) தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது இரண்டாவது கட்ட ஊழல் புகார் பட்டியலை அளித்தார் என்றும் அப்போது, பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் இருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைகளை உயர்த்திப் பிடித்த மோடி: ‘சண்டையை சமாதானம் செய்யவா? ஊழல் கறையை காட்டவா?”
“தமிழக ஆளுநரிடம், அமைச்சர்கள் மீது ஊழல் புகார் அளித்துவிட்டு, ஆளுநர் மாளிகை முன்பு செய்தியாளர்களை சந்தித்த பொதுச்செயலாளர் துரைமுருகன், “2018ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தால் ஊழல் தடுப்புச் சட்டத்தில் அரசு அதிகாரி ஒருவர்மீது யாரேனும் ஊழல் செய்துள்ளார் என்று புகாரினை, ஊழல் தடுப்பு காவல் அதிகாரியிடம், ஊழல் செய்துள்ள அதிகாரியினை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் படைத்த உயர் அதிகாரியிடம், அடுத்தகட்ட விசாரணையை துவக்க அனுமதி பெறவேண்டும்.” என்று அவர் நினைவூட்டியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஆனால், நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட ஊழல் தடுப்பு சட்டத்திற்கு எதிராகவும், ஏமாற்றும் வகையிலும், அமைச்சர்கள்மீது ஊழல் தடுப்பு காவல் அதிகாரியிடம் கொடுக்கப்படும் எந்த ஊழல் புகாரினையும், அவர்களை பதவி நீக்கும் அதிகாரம் படைத்த ஆளுநரிடம் அனுப்பி அனுமதி பெறுவதைத் தடுக்கும் வகையில் ஒரு அரசாணையை 19.12.2018 அன்று பிறப்பித்து உள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் நேர்காணல்: ‘ஊழல் புகார் விவாதத்திற்கு நான் தயார், ஸ்டாலின்தான் சாக்கு சொல்லி தப்பிக்கிறார்’
“இந்த அரசாணையின் அடிப்படையில், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் தடுப்பு அதிகாரியிடம் கொடுக்கப்படும் ஊழல் புகாரினை தங்களுக்கு கீழ் பணிபுரியும் பொதுச் செயலர் எனும் அரசு அதிகாரியிடம், ஊழல் தடுப்பு காவல் அதிகாரி முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது கொடுக்கப்படும் ஊழல் புகாரினை அனுப்பி எஃப்ஐஆர் பதிவு செய்ய முன் அனுமதி பெறவேண்டும்.
இதன் மூலம் ஊழல் புகார்களை எஃப்ஐஆர் பதிவு செய்யாமல், முறையான, சட்டப்படியான, விசாரணை இல்லாமல், புகார்களைத் தள்ளுபடி செய்துவிடுகின்றனர்.” என்று துரைமுருகன் சுட்டிக்காட்டியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதிரியான சட்டவிரோத விசாரணைகளில் ஊழல் தடுப்பு காவல் அதிகாரியிடம் கொடுக்கப்படும் ஊழல் புகார்களை, தங்களுக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தும், தனக்கேற்ற அதிகாரிகளை நியமித்தும், சட்டவிரோதமாக ஊழல் புகார்களை மூடிவிடுகின்றனர் அல்லது மூடிவிட முயற்சிக்கின்றனர் என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முதல்வர், அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் – நடவடிக்கை எடுக்க திமுக மனு
“ஆகவேதான், நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட ஊழல் தடுப்பு சட்டத்தின் அடிப்படையில், முறையாக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள்மீது ஊழல் தடுப்பு காவல் அதிகாரியிடம் கொடுக்கப்படும் புகார்கள்மீது நடவடிக்கை எடுக்க தமிழக ஆளுநரிடம் நாங்கள் ஆதாரங்களுடன் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்மீது பல ஆயிரம் கோடி ரூபாய்க்கான ஊழல் புகார்களை ஆதாரங்களுடன் கொடுத்துள்ளோம்.” என்று துரைமுருகன் குறிப்பிட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், “20.12.2020 அன்று 7 அமைச்சர்கள் மீது சட்டப்படியான, முறையான ஆவணங்களின் அடிப்படையில் ஆதாரங்களுடன் 15 புகார்களை ஆளுநரிடம் கொடுத்திருந்தோம். அன்று பத்திரிக்கையாளர்கள் மூலமாக இது முதல்கட்ட புகார்கள் என்றும், அடுத்தகட்ட புகார்களை ஆளுநரிடம் கொடுப்போம் என்று சொல்லியிருந்தார் தலைவர் மு.க.ஸ்டாலின்.
“சொன்னதை செய்வோம் என்பதன் அடிப்படையில், இன்று இரண்டாம் கட்ட புகாரினை முதல்வர் மற்றும் நான்கு அமைச்சர்கள் மற்றும் ஒரு ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது என ஆயிரம் கோடி ரூபாய்க்கான ஊழல் புகாரினை ஆளுநருக்கு கொடுத்துள்ளோம்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.