டெல்லி கலவரம் குறித்து ஆய்வு செய்த, டெல்லி சிறுபான்மையினர் ஆணையம் உட்பட பல்வேறு உண்மை அறியும் குழுக்களின் அறிக்கைகள் செல்லுபடி ஆகாது என உத்தரவிடக் கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ம் தேதி, வடகிழக்கு டெல்லியின் ஜாஃப்ராபாத் பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல், வன்முறையாக வெடித்தது. இதில் ஐம்பதற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 600-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
அந்த கலவரத்தின் போது, ஷிவ் விகார் பகுதியில் இருந்த டிஆர்பி கான்வெண்ட் பள்ளி கொளுத்தப்பட்டது. அந்த பள்ளியைச் சேர்ந்த தர்மேஷ் ஷர்மா. டெல்லி சிறுபான்மை ஆணையத்தின் உண்மை அறியும் குழு உட்பட ஐந்து அறிக்கைகளை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
டெல்லி கலவரம் – பயம் பாதுகாப்பின்மை காரணமாக பள்ளியை விட்டு மரசாக்களில் சேரும் மாணவர்கள்
அந்த மனுவில், உண்மை அறியும் குழுக்களின் அறிக்கைகள், டிஆர்பி கான்வென்ட் பள்ளி தீ விபத்து பற்றி காவல்துறை பதிவு செய்த வழக்குகளை நேரடியாக பாதித்தன என்றும், காவல்துறையின் விசாரணையில் தலையிட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புகளுக்கு எந்தவொரு சட்டரீதியான பின்புலமும் இல்லை என்று கூறியுள்ளதுடன், டெல்லி சிறுபான்மையினர் ஆணையத்தின் அறிக்கைகளை விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
டெல்லி கலவரம்: குற்றப்பத்திரிகையில் குளறுபடி – குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கு ஜாமீன்
இந்த வழக்கில், மத்திய அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, ”ஒரு சம்பவம் நடக்கும் போதெல்லாம் தீர்ப்பாயங்கள் உருவாக்கப்படுகின்றன. அது நோட்டீஸ் அனுப்பி சாட்சிகளை அழைக்கிறது. நீதித்துறைக்கு இணையான மற்றொரு நீதி அமைப்பு இருக்க முடியுமா? எனது சொந்த தீர்ப்பாயத்தை என்னால் வைத்திருக்க முடியாது. நடத்தப்பட்ட விசாரணை சரியில்லை என தெரிந்தால், தகுதியான நீதிமன்றத்தை அணுகுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி கலவரம் “தன்னெழுச்சியானது” – உள்துறை அமைச்சகத்தின் மீளாய்வு!
மேலும் பல உண்மை அறியும் குழுக்கள் சுயமாக உருவாக்கப்பட்ட அமைப்புகள் என்றாலும், டெல்லி சிறுபான்மையினர் ஆணையம் சட்டரீதியான அமைப்பாகும் என்றும் மேத்தா தெரிவித்துள்ளார்.
டெல்லி கலவரம் “தன்னெழுச்சியானது” – உள்துறை அமைச்சகத்தின் மீளாய்வு!
பாஜக தலைவர் கபில் மிஸ்ராவின் உரை, டெல்லியின் பல்வேறு பகுதிகளில் வன்முறையைத் தூண்டியது என்று டெல்லி சிறுபான்மை ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த கலவரத்துக்கு காவல்துறை உடந்தையாக இருந்ததாகவும் கலவரத்தில் உதவியதாகவும் பல சாட்சியங்களை மேற்கோள் காட்டியுள்ளது. டெல்லி சிறுபான்மையினர் ஆணையத்தின் உண்மை அறியும் குழுவுக்கு, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் எம்.ஆர்.ஷம்ஷாத் தலைமை தாங்கினார்.
டெல்லி கலவரம் – விசாரணைக் குழு போலீசாரில் 4 பேருக்கு பதவி உயர்வு
நீதிபதிகள் டி.என்.படேல் மற்றும் ஜோதி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், மத்திய அரசு மற்றும் காவல்துறை பதில் அளிக்க உத்தரவிடப்பட்டு வழக்கு, மார்ச் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.