மதத்தின் அடிப்படையில் ஆர்எஸ்எஸ்க்கு தமிழ்நாட்டில் அனுமதி இல்லை என்று தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பொழுது, “எடப்பாடி பழனிச்சாமி ஒன்றிய அரசின் அச்சுறுத்தலால் பதற்றத்தில் உள்ளார். ஒருபுறம் சனாதனம், மனுநீதி பேசுபவர்களுடன் கைகோர்த்து கொண்டு மறுபுறம் திராவிடம் என பேசுகிறார். திராவிட மாடலுக்கு அவருக்கும் எந்த சம்மந்தமுமில்லை என்று தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி சனாதனவாதிகளின் கைக்கூலியாக உள்ளார். ஆர்எஸ்எஸ் பேரணியை தமிழ்நாட்டில் அனுமதிக்க என்ன அவசியம் உள்ளது. மதத்தின் அடிப்படையில் பிளவுபடுத்தும் ஆர்எஸ்எஸ்க்கு தமிழ்நாட்டில் அனுமதி இல்லை என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
Source : puthiyathalaimurai
Supreme court stays ADMK general secretary election in petition filed by OPS | EPS met Amith Shah
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.