உத்தரபிரதேசத்தில் கபடி வீராங்கனைகளுக்கு, கழிவறையில் வைக்கப்பட்டிருந்த உணவு விநியோகிக்கப்பட்ட காணொளி வெளியானதையடுத்து, மாவட்ட விளையாட்டு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தின் சஹாரன்பூரில், 17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான மாநில அளவிலான கபடி போட்டிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற வீராங்கனைகளுக்கு விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்கள் அடங்கிய பாத்திரங்கள் சிறுநீர் கழிக்கும் கழிவறையில் வைக்கப்பட்டுள்ளது.
அதனருகே ஒரு காகிதத்தில் பூரிகளும் இருந்துள்ளன. அங்கிருந்து வீராங்கனைகள் உணவு எடுத்து வரும் காணொளி சமூக ஊடகத்தில் வெளியாகி வைரலாகியது. கழிவறையிலிருந்து பாத்திரங்களை ஊழியர்கள் வெளியே எடுத்து வரும் மற்றொரு காணொளியும் வெளியானது. இதை கபடி வீராங்கனைகளே காணொளி எடுத்துக் கடந்த 16-ம் தேதி வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இந்த காணொளி வெளியானதை அடுத்து இதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், “பல நிகழ்ச்சிகளுக்கு பாஜக அரசு கோடிக் கணக்கில் செலவிடுகிறது. ஆனால் கபடி வீராங்கனைகளுக்கு முறையான ஏற்பாட்டை செய்ய பணம் இல்லை’’ என தெரிவித்துள்ளது.
டிஆர்எஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘”உத்தரபிரதேசத்தில் கழிவறையில் வைக்கப்பட்ட உணவு கபடி வீராங்கனைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீராங்கனைகளை பாஜக மதிக்கும் விதம் இதுதானா? வெட்கக்கேடு!’’ என தெரிவித்துள்ளது.
இதையடுத்து சஹாரன்பூர் விளையாட்டு அதிகாரி அனிமேஷ் சக்சேனாவை, உத்தரபிரதேச அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது.
“கபடி போட்டிக்கு மோசமான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக, புகார்கள் வந்தன. இது குறித்து விசாரணை நடத்தி 3 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டுள்ளேன். தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’” என்று சஹாரன்பூர் மாவட்ட ஆட்சியர் அகிலேஷ் சிங் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசம் – தலித் என்பதால் தாக்கபட்ட ஜொமாட்டோ ஊழியர் – இருவரை கைது செய்துள்ள காவல்துறை
ஒன்றிய அரசின் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘தவறு செய்த ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். அந்த ஒப்பந்ததாரர் பெயர் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.
Source : india today
Nakkeeran Prakash attacked by Kallakurichi Sakthi School Goondas | Dhamondra Prakash
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.