வினாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதால் நீர் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து நேரிடும். அதனால் கடலில் பிள்ளையார் சிலைகளைக் கரைக்க வேண்டாம் என்று பூ உலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து பூவுலகின் நண்பர்கள் இயக்கதைச் சேர்ந்த சுந்தர்ராஜன் கூறுகையில், பிள்ளையார் உள்ளிட்ட எந்த சிலைகளையும் கடலில் அல்லது நீர்நிலைகளில் கரைக்கக்கூடாது. இரசாயண வண்ணங்கள் மற்றும் பிஓபி கொண்டு செய்யப்படும் சிலைகள் கடலில் உள்ள உயிர்வளியை குறைக்கும் அதனால் கடல்வாழ் உயிரினங்கள் கடுமையாக பாதிக்கப்படும்.
வண்ணங்களில் பயன்படுத்தப்படும் கன உலோகங்கள் சின்னசின்ன உயிரினங்களில் படியும், அவற்றை சின்ன மீன்கள் உட்கொள்ளும், சின்னவைதான் பெரிய மீன்களுக்கு உணவு, பெரிய மீன்தான் நமக்கு உணவு, அப்படியெனில் நம்முடைய உணவுச் சங்கிலிக்கு கனஉலோகங்கள் வந்து சேரும். கடலில் உள்ள சின்ன உயிரினங்கள் பாதிப்படையும் போது நமக்கான ஆக்சிஜன் கிடைப்பது சிக்கலாகும்.
கர்நாடகா: ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி நடத்த கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஏனெனில் மனிதர்களுக்கு தேவையான ஆக்சிஜனில் 70% தயாரிப்பது கடலில் உள்ள சின்னசின்ன உயிரினங்கள்தான். ஏற்கனவே காலநிலை மாற்றத்தால் கடலின் அமிலத்தன்மை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவேதான் கோருகிறோம், கடலில் எந்த சிலைகளையும் கரைக்கவேண்டாம் என்று” பூவுலகின் நண்பர்கள் இயக்கதைச் சேர்ந்த சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
பிள்ளையாரை பாஜக மெம்பராக்க துடிக்கும் சங்கிகள் | Maruthaiyan Interview| Vinayagar Chaturthi |Aransei
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.