ஹரியானா உள்துறை அமைச்சரின், நீக்கப்பட்ட சர்ச்சைக்குரிய டிவிட்டர் பதிவை, டிவிட்டர் நிறுவனம் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.
ஸ்வீடனைச் சேர்ந்த பருவநிலை செயல்பாட்டாளரான கிரேட்டா துன்பெர்க், இந்தியாவில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு வழிகாட்டும், “டூல்-கிட்”, ஒன்றை பகிர்ந்திருந்தது தொடர்பாக, இந்திய அரசுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டியதாக டெல்லி போலீஸ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தது.
அந்த டூல் கிட்டை திருத்தி வெளியிட்ட காரணத்திற்கா பெங்களுரைச் சேர்ந்த, தீஷா ரவி என்ற 21 வயது பருவநிலை செயல்பட்டாளர், டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
देश विरोध का बीज जिसके भी दिमाग में हो उसका समूल नाश कर देना चाहिए फिर चाहे वह #दिशा_रवि हो यां कोई और ।
— ANIL VIJ MINISTER HARYANA (@anilvijminister) February 15, 2021
இந்நிலையில், ஹரியானாவின் உள்துறை அமைச்சர் அனில் விஜ், ”தேச விரோதத்தின் விதைகள் யாருடைய சிந்தனை ஒட்டத்திலாவது விதைக்கப்பட்டிருந்தால், அது வேருடன் அழிக்கப்பட வேண்டும். அது தீஷா ரவியாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி” எனப் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
— ANIL VIJ MINISTER HARYANA (@anilvijminister) February 15, 2021
அந்த கருத்து, ட்விட்டர் நிறுவனத்தின் கொள்கைகளுக்கு எதிராக இருப்பதாக கூறி அந்த பதிவை ட்டிவிட்டர் நிறுவனம் நீக்கியது. இது தொடர்பாக அமைச்சர் அனில் விஜ் ட்விட்டர் நிறுவனத்திடம் ஆட்சேபனையை பதிவு செய்தார்.
இதைத்தெடர்ந்து, ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பதில் அளித்துள்ள ட்விட்டர் நிறுவனம், இந்த புகார் ஜெர்மனிக்கு மட்டும் தான் பொருந்தும் எனவும் இந்தியாவுக்கு பொருந்தாது என கூறி அந்த பதிவை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.