Aran Sei

திஷா ரவியின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – பிப்ரவரி  23 ஆம்  தேதிக்கு தள்ளிவைத்த  டெல்லி நீதிமன்றம்

டூல்கிட் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் திஷா ரவியின் ஜாமீன் மனுமீதான தீர்ப்பைச் வரும் செவ்வாய்க்கிழமைக்கு (பிப்ரவரி 23) தள்ளி வைத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற்ற கலவரத்திற்கு, விவசாயிகள்  போராட்டம் தொடர்பான டூல்கிட் தான் காரணம் என எந்த ஆதாரமும் இல்லை என நீதிமன்றத்தில் திஷா ரவியின் வழக்கறிஞர் வாதிட்டுள்ளார்.

போதைப் பொருள் கடத்தல்: பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் பமீலா கோஸ்வாமி கைது

”விவசாயிகள் போராட்டத்தைச் சர்வதேச அளவில் கொண்டு சென்றது தேசதுரோகம் என்றால், நான் சிறையில் இருப்பதே சிறந்தது” எனத் திஷா ரவி தனது வழக்கறிஞர்மூலம் நீதிமன்றத்தில், இன்று (பிப்ரவரி 20) தெரிவித்துள்ளார்.

முன்னதாக, திஷா ரவிக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்த  டெல்லி காவல்துறை, ”காலிஸ்தானை ஆதரிப்பவர்களுடன் சேர்ந்து டூல்கிட்டை உருவாக்கியது மற்றும் இந்தியாவிற்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்கும், விவசாயிகளின் போராட்டம்மூலம் நாட்டில் அமைதியின்மையை உருவாக்குவதற்கும் தீட்டப்பட்ட சர்வதேச சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகத் திஷா ரவி இருந்தார்” எனக் குற்றம்சாட்டியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் முன்னாள் தலைவர் கோல்வால்கரை புகழ்ந்த கலாச்சார அமைச்சகம் – அரசியல் கட்சிகள், நடிகர்கள் கண்டனம்

வழக்கை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்தர் ரானாவிடம், ”இது வெறும் டூல்கிட் இல்லை. இதன் உண்மை திட்டம் இந்தியாவிற்கு அவப்பெயர் ஏற்படுத்துவதும், அமைதியின்மையை உருவாக்குவதும் தான்” எனக் காவல்துறை கூறியுள்ளது.

சட்ட நடவடிக்கைகள்குறித்து அறிந்திருந்த  திஷா ரவி, தனது வாட்சப் உரையாடல்கள், மின்னஞ்சல்கள் மற்றும் இதர ஆதாரங்களை அழித்துள்ளார் எனக் குற்றம்சாட்டும் காவல்துறை, திஷா தவறேதும் செய்யவில்லை என்றால், ஏன் அவர் ஆதாரங்களை அழிக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

காவல்துறையின் குற்றசாட்டுகளை மறுத்த திஷா ரவியின் வழக்கறிஞர், “தடை செய்யப்பட்ட சீக் ஃபார் ஜஸ்டிஸுடன் திஷாவை இணைக்க எந்த ஆதாரமும் இல்லை. திஷா யாரோ ஒருவரை சந்தித்திருந்தாலும், அவர் பிரிவினைவாதி என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை” என வாதிட்டார்.

எரிபொருள் விலையேற்றம்: ‘பேருந்துகளில் போகும் பொதுமக்கள் பழகிக்கொள்வார்கள்’ – பாஜக தலைவர்

”டெல்லியில் விவசாயிகளின் பேரணிக்கு அனுமதியளித்த காவல்துறை, அதில் பங்கேற்க மக்களை நான் கேட்டுக்கொண்டேன் எனக் கூறுகின்றனர், இது எப்படி தேசவிரோதமாகும்” எனத் திஷா ரவி நீதிமன்றத்தில்  கேள்வி  எழுப்பியுள்ளார்.

Source : PTI

திஷா ரவியின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – பிப்ரவரி  23 ஆம்  தேதிக்கு தள்ளிவைத்த  டெல்லி நீதிமன்றம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்