Aran Sei

தீஷா ரவி கைது: ’டெல்லி காவல்துறையின் அசிங்கமான நடவடிக்கை’ – நடிகர் சித்தார்த் கடும் கண்டனம்

தீஷா ரவிக்கு நிபந்தனையற்ற ஆதரவை தருகிறேன். இது போன்றோரு சம்பவம் உங்களுக்கு நேர்ந்ததற்காக நான் மிகவும் வருத்தமடைகிறேன் சகோதரி. நாங்கள் அனைவரும் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். தைரியமாக இருங்கள். இந்த அநீதியும் கடந்துப் போகும்” என தீஷா ரவிக்கு ஆதரவாக நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

நாம் ஏன் விவசாயிகள் போராட்டம்குறித்து பேசுவதில்லை என உலக புகழ் பெற்ற பாப் இசை கலைஞரான ரிஹான்னாவின் ட்விட்டர் பதிவுக்குப் பின்னர் விவசாயிகள் போராட்டம் சர்வதேச கவனத்தை பெற்றது. ரிஹான்னாவை தொடர்ந்து அமண்டா கெர்னி, மியா காலிஃபா, வனேசா நகடே, லிசி கங்குஜம், மீனா ஹாரிஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்தாலும், கிரேடா துன்பெர்க்கின் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஸ்வீடனைச் சேர்ந்த பருவநிலை செயல்பாட்டாளரான கிரேட்டா துன்பெர்க், இந்தியாவில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு வழிகாட்டும், “டூல்-கிட்”, ஒன்றை பகிர்ந்திருந்தது தொடர்பாக, இந்திய அரசுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டியதாக டெல்லி போலீஸ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தது.

ஓவியாவின் கோபேக் மோடி ஹேஷ்டேக்: தேசதுரோக வழக்கு பதிவு செய்யவேண்டும்: காவல் ஆணையரிடம் புகாரளித்த தமிழக பாஜக

தேசவிரோத சதித்திட்டத்தின் ஒரு பகுதி என்று காவல்துறை கூறும் இந்த “டூல்-கிட்” என்பது உண்மையில், விவசாயிகள் போராட்டம் தொடர்பான கட்டுரைகள், சமூக வலைத்தள கணக்குகள் ஆகியவற்றின் தொகுப்பு ஆகும். இந்தப் போராட்டத்தைப் பற்றி அறிந்து கொண்டு, அதைப் பரப்புவதற்கு விரும்பும் யாருக்கும் உதவுவதற்காக உருவாக்கப்பட்டது என்று தி வயர் தெரிவிக்கிறது.

விவசாயிகள் போராட்டம் – ” கைது செய்யப்பட்ட 21 வயது மாணவி தீஷா ரவிக்கு போலீஸ் காவல் சட்ட விரோதமானது “

“டூல்-கிட் என்பது போராட்டங்களுக்காகத் தயாரிக்கப்படுவது, அது போராட்டத்தை ஆதரிப்பவர்கள் இயக்கத்தில் பங்கேற்க உதவுகிறது. அதிக எண்ணிக்கையில் ஆதரவாளர்களைத் திரட்டுவதன் மூலம் இயக்கத்தை வலுப்படுத்துகிறது” என்று தி வயர் விளக்கியிருந்தது. “ஒரு நீண்ட கால இயக்கத்தில், போராட்டத்தின் நியாயங்களைத் தெளிவுபடுத்தும் ஒரு துண்டறிக்கையின் புதிய வடிவம் என்று டூல்-கிட்டை கருதலாம்” என்றும் அது கூறியிருந்தது.

தீஷா ரவி கைது : எதேச்சதிகார அரசுக்கு எதிராக மாணவர்களும் இளைஞர்களும் குரல் கொடுக்க வேண்டும் : ப.சிதம்பரம்

அந்த டூல் கிட்டை திருத்தி வெளியிட்ட காரணத்திற்கா இந்தியாவில் பருவநிலை மாற்றத்தை எதிர்ப்பதற்கான “எதிர்காலத்துக்கான வெள்ளிக் கிழமைகள் (Fridays for Future)” என்ற இயக்கத்தைத் உருவாக்கியவர்களில் ஒருவரான தீஷா ரவி கைது செய்யப்பட்டுள்ளார்.

தீஷா ரவி கைது – அகிலேஷ் யாதவ், ஜிக்னேஷ் மேவானி, சசி தரூர், கவிதா கிருஷ்ணன் கண்டனம்

தீஷா ரவி கைதுக்குப் பல ட்விட்டர் பதிவுகளின் மூலமாக நடிகர் சித்தார்த் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தன் ட்விட்டர் பக்கத்தில்,”நீங்கள் நண்பர்களுடன் ஒரு திரைப்படத்தைப் பார்க்க விரும்பினால், அவர்கள் அனைவருக்கும் எந்தத் திரைப்படம், எந்த நேரம், எங்குச் செல்வது என்று செய்தி அனுப்புகிறீர்கள். இதை  டூல்கிட் என்று அழைக்கலாம். இதற்காக கைது செய்யும் அசிங்கமான வேலையைத்தான் அரசியல் கட்சிகளின் தகவல் தொழிற்நுட்ப பிரிவுகள் செய்கின்றன. இந்த அசிங்கத்தை நிறுத்துங்கள். இது டெல்லி காவல்துறைக்கு அசிங்கம்” என அவர் பதிவிட்டுள்ளார்.

தீஷா ரவி கைது: ‘விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தரும் குடிமக்களுக்கு அரசு தரும் எச்சரிக்கை’ – விவசாய சங்கங்கள் கருத்து

மேலும்,” இந்தக் கொடூரமான, அநியாயமான, எதேச்சதிகார செயலைச் செய்யும் டெல்லி காவல்துறை யாரின் கீழ் செயல்படுகிறது? என ட்விட்டரில் கேள்வியெழுப்பியுள்ளார். (டெல்லி காவல்துறை உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கீழ் செயல்படுவது குறிப்பிடத்தக்கது)

தீஷா ரவி கைது தொடர்பாக நடிகர் சித்தார்த்,”தீஷா ரவிக்கு நிபந்தனையற்ற ஆதரவை தருகிறேன். இது போன்றோரு சம்பவம் உங்களுக்கு நேர்ந்ததற்காக நான் மிகவும் வருத்தமடைகிறேன் சகோதரி. நாங்கள் அனைவரும் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். தைரியமாக இருங்கள். இந்த அநீதியும் கடந்துப் போகும்” என தீஷா ரவிக்கு அவர் ட்விட் செய்துள்ளார்.

அரசாங்கத்தை எதிராகக் குரல் கொடுப்பவர்களை பாஜக நடத்தும் விதம் தொடார்பாக, ”போராட்டக்காரர்கள் தேவாலயத்தில் கூடினால், கிறிஸ்துவ மிஷனரிகள், பிரியாணி சாப்பிட்டால் ஜிகாதிகள், தலைப்பாகை அணிந்திருந்தால் காலிஸ்தானியர்கள், அவர்கள் தாமாக ஒன்றிணைந்தால், டூல் கிட் (டூல் கிட் சர்வதேச சதி). ஆனால், நாம் இந்தப் பாசிச அரசாங்கத்தை எதிர்த்து எதுவும் பேசக் கூடாது.” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் டூல் கிட் தொடர்பாக அவர், ”பிரபல திரைப்பட நட்சத்திரங்களின் ரசிகர்கள் தங்களுடைய நாயகர்களுக்காக உருவாக்குகிற ட்விட்டர் பதிவுகளையும், தங்கள் நட்சத்திரங்களின் பிறந்தநாளின் போது அனைத்து ரசிகர்களும் பொதுவாக வைக்கும் காட்சி படங்களையும், அவர்களுக்கான ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்வதற்கும் நடக்கும் திட்டமிடலை நீங்கள் கவனித்துப் பார்த்தால், டூல் கிட் குறித்து நாம் விவாதிப்பது எவ்வளவு அற்பமானது என்பது நமக்குப் புரியும். நாம் மிகவும் கொடூரமான மனிதத்தன்மையற்ற சமூகத்தில் வாழ்கிறோம்” என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

முக்கியமான விவகாரங்கள் விசாரிக்கப்படாமல் இருப்பது தொடர்பாக அவர், ”கோடி மீடியாக்கள் (பாஜகவிற்கும், பிரதமர் மோடிக்கும் ஆதரவாகச் செயல்படும் ஊடகங்களைக் கோடி மீடியா எனக் குறிப்பிடுகிறார்கள்) விசாரிக்கப்படவில்லை. திட்டமிட்டு, வளைந்து கொடுக்கப்பட்ட ஊடக தர்மம் விசாரிக்கப்படவில்லை ஆனால் ஒரு டூல் கிட் விவகாரம் விசாரிக்கப்படுகிறது. இது நிஜ வாழ்வில் விலங்குப் பண்ணை” என்று நடிகர் சித்தார்த் குறிப்பிட்டுள்ளார்.

தீஷா ரவி கைது: ’டெல்லி காவல்துறையின் அசிங்கமான நடவடிக்கை’ – நடிகர் சித்தார்த் கடும் கண்டனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்