சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண் பக்தர் ஒருவர் சாமி வழிபாடு செய்ய சென்றபோது சாதிப்பெயரை சொல்லித் திட்டியாக அளித்த புகாரில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புவனகிரி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசீலா. நடராஜர் கோயிலுக்குச் சென்று சிற்றம்பல மேடைக்கு(கனகசபை) செல்ல முன்றார்… ஆனால், அப்போதும் தீட்சிதர்கள் சிலர் அவரை தடுத்து திட்டி அனுப்பியுள்ளார். ஜெயசீலாவை தடுத்ததுடன், ஆபாசமாக பேசியும் சாதிரீதியாகவும் திட்டி, தாக்கி வெளியே அனுப்பிய காணொளி சமூக வலைதளங்களில் பரவலானது.. இதுகுறித்து ஜெயசீலா சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் தொடர்பாக, 20 தீட்சிதர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெண்ணை தாக்கி வெளியே அனுப்பிய சம்பவத்திற்கு கொலை முயற்சி, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.