கொரோனா பொது முடக்க காலத்தில், வடகிழக்கு மாகாணங்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் மெய்நிகர்(ONLINE) வகுப்பில் கலந்து கொள்வதற்கான டிஜிட்டல் உபகரணங்கள் இல்லாமல் இருந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த புதன் கிழமை நேஷனல் அச்சீவ்மெண்ட் சர்வே 2021 (National Achievement Survey) அறிக்கை வெளியானது. இந்த அறிக்கையின் படி, வடகிழக்கு மாகாணங்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் கொரோனா பொது முடக்க காலத்தில் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்வதற்கான டிஜிட்டல் உபகரணங்கள் இல்லாமல் இருந்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
கொரோனா பொதுமுடக்க காலத்தில் வடகிழக்கு மாகணங்களில் இருந்த கல்வி வாய்ப்புகுறித்து அறிந்து கொள்வதற்காக நடத்தப்பட்ட இந்த ஆய்வு, 3, 5, 8, 10-ம் வகுப்பு குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்டது.
இந்தியாவை சொந்தம் கொண்டாட உரிமையுள்ளவர்கள் திராவிடர்களும் பழங்குடிகளும்தான் – ஓவைசி
இந்த ஆய்வின் படி, அஸ்ஸாம், மணிப்பூர், மேகாலயா ஆகிய மாநிலங்களில் 48 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்களிடம் வகுப்பில் கலந்து கொள்வதற்கான டிஜிட்டல் உபகரணங்கள் இல்லை என்று தெரியவந்துள்ளது.
அருணாசலபிரதேசத்தில், 43 சதவீதம் மாணவர்களிடம் ஆன்லைவகுப்புகளில் கலந்து கொள்வதற்கான டிஜிட்டல் உபகரணங்கள் இல்லை. மிசோரம் மாநிலத்தில் 39 சதவீதமாகவும், நாகாலாந்து மாநிலத்தில் 37 சதவீதமாகவும் இருந்த இந்த எண்ணிக்கை, திரிபுரா மாநிலத்தில் 46 சதவீதமாக அதிகரித்திருந்தது.
ஆய்வு மேற்கொள்ளப்பட்ட மாணவர்களில் அஸ்ஸாமில் 58 சதவீத மாணவர்கள் கொரோனா கால பொதுமுடக்க காலத்தைப் பயம், பதற்றத்துடன் இருந்ததாக தொரிவித்துள்ளனர். இதே போன்ற உணர்வை அனுபவித்ததாக 61 சதவீத அருணாச்சல பிரதேச மாணவர்கள் மணிப்பூர், மேகாலயாவில் 59 சதவீத மாணவர்களும் தெரிவித்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை மிசோகத்தில் 54 சதவீதமாகவும், நாகலாந்தில் 62 சதவீதமாகவும், திரிபுராவில் 59 சதவீதமாகவும் இருந்தது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வின் மூலமாக, பாடம் நடத்துவதற்கான உபகரணங்களை பயன்படுத்தும் வளங்கள் ஆசிரியர்களிடம் எந்த அளவிற்கு இருந்தது என்று தெரியவந்துள்ளது. அதன்படி, அஸ்ஸாமில் 16 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே பாடம் நடத்துவதற்கான உபகரணங்களைப் பயன்படுத்த முடிந்தவர்களாக இருந்துள்ளனர். அதேபோல 16 சதவீத பள்ளிகளில் மட்டும் ஸ்மார்ட் கிளாஸ் வசதி இருக்கிறது. ஆசிரியர்களுக்கான உபகரணப்பயன்பாடு, ஸ்மார்ட் கிளாஸ் வசதி மணிப்பூரில் 16 சதவீதமாக இருந்திருக்கிறது.
மேகாலயாவில் ஆசிரியர்களின் பயன்பாடு 10 சதவீதமாகவும், வகுப்பறை வசதி 12 சதவீதமாகவும், மிசோரத்தில் இவை முறையே 14, 11 சதவீதங்களாகவும், நாகாலாந்தில் முறையே 13, 15 சதவீதங்களாகவும், திரிபுராவில் அவை 19, 28 சதவீதங்களாகவும் இருந்துள்ளது.
அருணாச்சல பிரதேசத்தில், 17 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே கல்வி உபகரணங்களை பயன்படுத்தும் வசதி பெற்றவர்களாகவும், 23 சதவீத பள்ளிகள் மட்டுமே ஸ்மார்ட் கிளாஸ் வசதி பெற்றதாகவும் இருந்திருக்கிறது என்று தெரிய வந்துள்ளது.
Source: the hindu
Defamation Case போட்டு Annamalai ய Court க்கு இழுக்கனும் Vanchi Nathan
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.