Aran Sei

‘பாஜகவுக்கு எதிரான போரில் உங்களோடு இருப்போம்’ – தெலங்கானா முதலமைச்சருக்கு உறுதியளித்த முன்னாள் பிரதமர் தேவேகவுடா

பாஜகவிற்கு எதிரான போரில் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவிடம் முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான எச்.டி.தேவேகவுடா உறுதியளித்ததாக தெலங்கானா முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஒன்றியத்தில் பாஜகவிற்கு மாற்றாக புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட சில மாநில முதலமைச்சர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

பாஜகவைத் தோற்கடிக்க ஒன்றிணைவோம் என மம்தா பானர்ஜி பிராந்திய கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

‘2024 தேர்தலில் பாஜகவை ஒன்று சேர்ந்து தோற்கடிப்போம்’- மாநிலக் கட்சிகளுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்த பிறகு, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முதலமைச்சர்களை ஒருங்கிணைத்து கூட்டம் ஒன்றை நடத்தவும் அவர் திட்டமிட்டு வருகிறார். அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சீதாராம் யெச்சூரி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாணர்ஜி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 37 தலைவர்களுக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

தெலுங்கானா முதலமைச்சரும் தெலுங்கானா ராஷ்ட்ர சமீதி கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவும் பாஜகவிற்கு எதிரான கூட்டணிக்கு முனைப்பு காட்டி வருகிறார்.

அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பில் இணையுங்கள் – மம்தா, ஒபிஎஸ் உள்ளிட்ட 37 தலைவர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு

அண்மை காலங்களாக, பிரதமர் மற்றும் பாஜகவின்மீது தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வருகிறார்.

அண்மையில், ஹைதராபாத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், ஒன்றிய அரசை எதிர்த்து யாரேனும் கேள்விகேட்டால்,  அவர்கள் மீது தேசவிரோதி, அர்பன் நக்ஸல் என முத்திரையை குத்திவிடுகிறது ஒன்றிய அரசு என்றும் கேள்வி கேட்பவருக்கு எதிராக எப்போதும் தன்னுடைய முத்திரையைத் தயாராக வைத்துள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்தநிலையில், நேற்று(பிப்பிரவரி 15), எச்.டி.தேவேகவுடா கே.சந்திரசேகர ராவை தொலைப்பேசியில் அழைத்து பேசியதாக தெலங்கானா முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

‘கேள்வி எழுப்பினால் தேசதுரோகி, அர்பன் நக்சல் என்று முத்திரை குத்துகிறது ஒன்றிய அரசு’ – தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ்

அப்போது, “வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக நீங்கள் நன்றாக சண்டைப் போடுகிறீர்கள். வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக நாம் அனைவரும் சண்டையிட வேண்டி இருக்கிறது. நம் நாட்டின் மதசார்பின்மை, பண்பாடு மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றை காக்கும் போராட்டத்தில் நாங்கள் உங்களுக்கு துணை நிற்கிறோம். உங்களுக்கு என் ஆதரவுகள். உங்கள் சண்டையை தொடருங்கள். எங்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குதான்” என  கே.சந்திரசேகர ராவிடம் எச்.டி.தேவேகவுடா கூறியதாக, தெலங்கானா முதலமைச்சர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Source: PTI

‘பாஜகவுக்கு எதிரான போரில் உங்களோடு இருப்போம்’ – தெலங்கானா முதலமைச்சருக்கு உறுதியளித்த முன்னாள் பிரதமர் தேவேகவுடா

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்