Aran Sei

நபிகள் நாயகம் பற்றிய அவதூறு கருத்து: உ.பி, யில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிப்பு

த்தரபிரதேசத்தின் கான்பூர் நகரில் நபிகள் நாயகம் பற்றிய அவதூறு கருத்து தொடர்பாக கடந்த வாரம் வன்முறை ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளை மாநில அரசு புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டு வருகின்றன.

இந்த வன்முறையின் முக்கிய குற்றவாளியாக உள்ளூர் இஸ்லாமியத் தலைவர் ஜாஃபர் ஹயாத் ஹஷ்மி கருதப்படுகிறார். அதனால் அவரின் வீடுகளை இடிக்க புல்டோசர்கள் தயாராக உள்ளன என்று கான்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கான்பூர்: வகுப்புவாத கலவரத்தைத் தூண்டும் சமூக வலைதள பதிவுகள் – பாஜக பிரமுகர்  உள்ளிட்ட 12 பேரை கைது செய்த காவல்துறையினர்

ஒரு தொலைக்காட்சி விவாதத்தின் போது நபிகள் நாயகம் குறித்து பாஜக (முன்னாள்) செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்களினால் ஜூன் 3-ம் தேதி கான்பூரில் உள்ள மிகப்பெரிய மொத்த சந்தைகளில் ஒன்றான பரேட் சந்தையில் உள்ள கடைகளை மூடுமாறு ஒரு இஸ்லாமிய அமைப்பின் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து, வன்முறை மற்றும் கல்வீச்சு சம்பவங்கள் ஏற்பட்டன.

கான்பூரில் நடைபெற்ற வகுப்புவாத கலவரம் தொடர்பாக பாஜக பிரமுகர் உள்ளிட்ட 51 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Source : india today

அம்பேத்கருக்கு எதிராக கலவரம் செய்த சாதிவெறியர்கள் | Amalapuram Ambedkar Issue

நபிகள் நாயகம் பற்றிய அவதூறு கருத்து: உ.பி, யில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிப்பு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்