2016 ஆம் ஆண்டில் பாஜக அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் ஒரே துரதிஷ்டவசமான வெற்றி என்பது இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்ததுதான் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
The only unfortunate success of Demonetisation was the TORPEDOING of India’s economy. pic.twitter.com/S9iQVtSYSx
— Rahul Gandhi (@RahulGandhi) May 29, 2022
கருப்பு பணத்தையும் கள்ள நோட்டையும் ஒழிக்க போகிறோம் என்று பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்தார்கள். ஆனால் இந்தியாவில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் சுமார் 100 விழுக்காடு அதிகரித்துள்ளது மற்றும் 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் 50 விழுக்காடு அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கை கூறுகிறது என்று ட்விட்டரில் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 அன்று, பிரதமர் நரேந்திர மோடி பழைய ரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுகளை மதிப்பிழப்பு செய்வதாக அறிவித்தார்.
Source : NDTV
Teleprompter இல்லன்னா மோடியால பேச முடியுமா? | Surya Siva Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.