Aran Sei

பணமதிப்பிழப்பு விவகாரம்: ஒரு நடவடிக்கை தோல்வி அடைந்து விட்டது என்பதற்காக அதன் நோக்கமும் தவறானது இல்லை – உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு வாதம்

ணமதிப்பிழப்பு விவகாரத்தில் ஒரு நடவடிக்கை தோல்வி அடைந்து விட்டது என்பதற்காக அதன் நோக்கமும் தவறானது இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி இரவு, அப்போது புழக்கத்திலிருந்த ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். அதன்படி நாடு முழுவதும் பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளுக்கு பதில், புதிய ரூ.500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் ஒரே வெற்றி இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைத்ததுதான்: ராகுல்காந்தி விமர்சனம்

பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி மாற்றி கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக ஒன்றிய அரசு கொண்டு வந்த திட்டத்தின் மூலம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு இந்தியாவில் ரூ.15.40 முதல் ரூ.15.5 லட்சம் கோடி வரையில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திலிருந்தது என மதிப்பிடப்பட்டு இருந்தது. பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தவர்கள் வங்கிகள் மூலம் புதிய நோட்டுக்களை பெற்றுக் கொள்ள ஒன்றிய அரசு கால அவகாசம் வழங்கியது.

பணமதிப்பிழப்பு வெற்றி என்றால் ஊழல் ஏன் முடிவுக்கு வரவில்லை? – பிரியங்கா காந்தி கேள்வி

இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை, கடந்த 2016 நவம்பர் 15 அன்று விசாரித்த அப்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த டி.எஸ். தாக்கூர் தலைமையிலான அமர்வு, பணமதிப்பு நீக்க திட்டத்தின் பின்னணியில் உள்ள அரசின் நோக்கம் பாராட்டுக்குரியது என்றாலும், அதனால் மக்களுக்கு ஏற்படும் அசவுகரியங்கள் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம் என்று தெரிவித்திருந்தது.

அரசின் பொருளாதார கொள்கையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை, இந்த விவகாரத்தில் அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு தடை உட்பட இடைக்கால உத்தரவு எதனையும் பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து, 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட 58 ரிட் மனுக்களை நீதிபதி எஸ். அப்துல் நசீர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரணை செய்கிறது. நீதிபதிகள் கவாய், ஏ.எஸ். போபண்ணா, வி. ராமசுப்ரமணியன் மற்றும் பி.வி. நாகரத்னா ஆகியோரும் விசாரணை செய்து வருகின்றனர்.

500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை பண மதிப்பிழப்பு செய்ய செய்ய ரிசர்வ் வங்கி சட்டத்தின் கீழ் ஒன்றிய அரசுக்கு அதிகாரம் உள்ளதா? – உச்சநீதிமன்றம் கேள்வி

இந்த வழக்கில், நீதிபதி கவாய் கூறும்போது, பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்திய ரிசர்வ் வங்கியின் முதன்மையான சட்ட பிரிவு 26(2) முன்னெடுத்து இருக்கப்பட வேண்டும். பணமதிப்பிழப்பு கொள்கையை முடிவு செய்ததில்,இந்திய ரிசர்வ் வங்கியின் பங்கு உள்ளது என்பதில் விவாதமில்லை.

இந்த நடவடிக்கை, இந்திய ரிசர்வ் வங்கியின் சட்டப் பிரிவு 26(2)-க்கு உட்பட்டு அதனுடன் ஒத்துப் போகவில்லை என மனுதாரர்கள் தெரிவித்து உள்ளனர். மனுதாரர்களின் இந்த மனுக்களுக்கு நீங்கள் என்ன பதில் அளிக்கப் போகிறீர்கள்? இவை அனைத்தும் நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார விவகாரங்கள். அதனை தொடாதீர்கள் என்று மட்டுமே நீங்கள் கூறுகிறீர்கள்.

எதிர் தரப்பினரின் எதிர்ப்பு மனுவுக்கு நீங்கள் அளிக்கும் பதில் என்ன? அவர்களுடைய பதிலுக்கு உங்களது பதில் என்ன? என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

2021-ல் பிடிபட்ட கள்ளநோட்டுகளில் ரூ.2000 நோட்டுதான் அதிகம் – தேசிய குற்ற ஆவணக் காப்பகம்

இந்த நடைமுறை பின்பற்றப்பட்டதில் பல குறைபாடுகள் உள்ளன என்ற குற்றச்சாட்டுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். உங்களது கருத்துருவின்படி இலக்கை அடைந்து விட்டோம் என நீங்கள் வாதம் செய்து கொண்டிருக்கிறீர்கள். நடைமுறை பின்பற்றப்பட்டு உள்ளதா? அல்லது இல்லையா? என எங்களிடம் தெரிவியுங்கள் என்று உச்சநீதிமன்றம் கூறியது.

இதுபற்றி ஒன்றிய அரசு வழக்கறிஞர் ஆர். வெங்கடரமணி ஆஜராகி அளித்த விளக்கத்தில், வழக்கில் கடிகாரம் திருப்பி, பழைய நேரம் காட்டும்படி ஓடச் செய்வது என்பது நொறுங்கிய முட்டையை திரும்ப பழைய நிலைக்கு கொண்டு வருவது போன்றது ஆகும். இந்த வழிகளால், எளிதில் அறியக் கூடிய நிவாரணம் அளிக்க முடியாத சூழலில் உச்ச நீதிமன்றம் எந்த அறிவிப்பையும் வெளியிட முடியாது என அவர் கூறியுள்ளார்.

பண மதிப்பிழப்பு என்பது தனிப்பட்ட பொருளாதார கொள்கை அல்ல. அது ஒரு சிக்கலான பண கொள்கை. முற்றிலும் வேறுபட்ட நடவடிக்கைகளே பின்பற்றப்படும்.

பண மதிப்பிழப்பு செய்த பிறகும் கறுப்பு பணத்தை கைப்பற்றுவது எப்படி? – ஒன்றிய அரசை கிண்டல் செய்த கனிமொழி எம்.பி,

இந்திய ரிசர்வ் வங்கியின் பங்கும் இதில் உள்ளது. நாங்கள், இங்கொன்றும், அங்கொன்றும் உள்ள கருப்புப்பணம் பற்றிய தேடலில் ஈடுபடவில்லை. இங்குமங்கும் உள்ள சில போலியான நோட்டுக்களை தேடவில்லை. பெரிய அளவிலான விவரங்களை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளோம் என அவர் கூறியுள்ளார்.

அதனால், நீங்கள் தோல்வி அடைந்து விட்டீர்கள் என்பதற்காக உங்களது நோக்கமும் தவறானது என்று உயர்ந்த நிலையிலுள்ள நல்ல மனிதர் ஒருவரும் கூற முடியாது என்றும் கூறியுள்ளார்.

‘உங்களுடைய பேஸ்புக், வாட்சப் விளம்பரத்திற்‌காக நாட்டை விற்காதீர்கள்’- பாஜகமீது ராகுல் காந்தி விமர்சனம்

இந்திய ரிசர்வ் வங்கி தனியாக செயல்பட வேண்டும் என மனுதாரர்கள் வாதம் செய்கின்றனர். ஆனால், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் அரசு இணைந்து பணியாற்றும் செயலை, வளைந்து போகக் கூடிய கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். அவை இரண்டும் ஒருங்கிணைந்து செயல்படும் இணைப்பை கொண்டவை என்று கூறியுள்ளார்.

எனினும், இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்தது. இதனை தொடர்ந்து அடுத்த கட்ட விசாரணை வருகிற டிசம்பர் 5-ம் தேதிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Source : business-standard

Annamalai Used Suriya Shiva to defeat Senior leaders of BJP | Daisy Saran | Gayathri Raghuram

பணமதிப்பிழப்பு விவகாரம்: ஒரு நடவடிக்கை தோல்வி அடைந்து விட்டது என்பதற்காக அதன் நோக்கமும் தவறானது இல்லை – உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு வாதம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்