Aran Sei

ஜஹாங்கீர்புரி வீடுகள் இடிப்பு: நாற்காலிகள், மேஜைகள், பெஞ்சுகளை அகற்ற புல்டோசர்கள் தேவையா என உச்சநீதிமன்றம் கேள்வி

நாற்காலிகள், மேஜைகள் மற்றும் பெஞ்சுகளை அகற்ற புல்டோசர்கள் தேவையா?” என புது டெல்லி முனிசிபல் கவுன்சிலை நோக்கி உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் ஜஹாங்கீர்புரியில் வீடுகள் இடிக்கக் கூடாது என்ற அதன் முந்தைய உத்தரவை உச்சநீதிமன்றம் நீட்டித்துள்ளது.

ஜஹாங்கிர்புரி வீடுகள் இடிப்பு: பார்வையிட வந்த காங்கிரஸ் கட்சியின் குழு ஒன்றை தடுத்து நிறுத்திய டெல்லி காவல்துறை

“ஜஹாங்கீர்புரியில் அனுமதியின்றி நடைபாதைகளை ஆக்கிரமித்துள்ள நாற்காலிகள், மேஜைகள் மற்றும் பெஞ்சுகளை அகற்றுவதற்குச் சட்டம் அனுமதித்துள்ளதாக” புது டெல்லி முனிசிபல் கவுன்சிலின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா கூறியதற்கு நாற்காலிகள், மேஜைகளை அகற்ற புல்டோசர்கள் தேவையா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு கட்டிடத்தை இடிப்பதற்கு தான் புல்டோசர்கள் தேவை என்று வழக்கறிஞர் துஷார் மேத்தா பதிலளித்துள்ளார்.

ஜஹாங்கீர்புரியில் வீடுகள் இடிக்கப்பட்ட மக்களின் உடைமைகள் முன்னறிவிப்பு இன்றி அகற்றப்பட்டதா என்பதற்கான பதிலை 2 வாரங்களுக்குள் கொடுக்க வேண்டும் என்று புதுடெல்லி முனிசிபல் கவுன்சிலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜஹாங்கிர்புரியில் வீடுகள் இடிப்பு: ‘நாம் நரகத்திற்கு செல்லும் வழியில் இருக்கிறோம்’ – ப.சிதம்பரம்

மறு உத்தரவு வரும் வரை வீடுகள் இடைக்ககூடாதென உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆட்சேபனை தெரிவித்தற்கு, கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

முன்னதாக நடந்த விசாரணையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர்களில் ஒருவரான பிருந்தா காரத் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் பி.வி.சுரேந்திரநாத் மற்றும் வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவையும் மீறி இடிப்புகள் தொடர்ந்ததாகக் குற்றம் சாட்டினர்.

ஜஹாங்கிர்புரியில் நடக்கும் சம்பவம் குறித்து நாட்டு மக்களிடம் பிரதமர் உரையாற்ற வேண்டும் – ராஜஸ்தான் முதலமைச்சர் வலியுறுத்தல்

ஜஹாங்கிர்புரியில் உள்ள ஜூஸ் கடை முன்னறிவிப்பின்றி அழிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட கணேஷ் குப்தாவுக்காக மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே உச்சநீதிமன்றத்தில் இழப்பீடு கோரியுள்ளார்.

டெல்லியில் உள்ள ஆக்கிரமிப்புகளைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால் தெற்கு டெல்லிக்கு வாருங்கள், அங்குள்ள ஒவ்வொரு இரண்டாவது கட்டிடமும் அனுமதி பெறாதது. அதனை இடித்துத் தள்ளுங்கள். டெல்லியில் 731 அங்கீகரிக்கப்படாத காலணிகள் உள்ளன, ஏன் இந்த குறிப்பிட்ட பகுதி மட்டும் குறிவைக்கப்படுகிறது என்று டேவ் கேள்வியெழுப்பியுள்ளார்.

Source : the hindu

ஜஹாங்கீர்புரி வீடுகள் இடிப்பு: நாற்காலிகள், மேஜைகள், பெஞ்சுகளை அகற்ற புல்டோசர்கள் தேவையா என உச்சநீதிமன்றம் கேள்வி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்