பழங்குடியின உரிமை செயல்பாட்டாளர் ஸ்டான் சுவாமியின் மரணம் தொடர்பாக சுதந்திரமான அமைப்பு விசாரிக்க வேண்டுமென பீமா கோரேகான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 10 சமுக செயல்பாட்டாளர்கள் நேற்றைய தினம் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், அருட்தந்தை ஸ்டான் சுவாமி “நிறுவன கொலையாலேயே” மரணமடைந்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.
அதுமட்டுமல்லாது, ஸ்டான் சுவாமிக்கு காலத்தோடு மருத்துவ உதவிகள் பெற அனுமதிக்காத, தேசிய புலனாய்வு முகமை மற்றும் தலோஜா மத்திய சிறைக் கண்காணிப்பாளர் குர்லேகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரியுள்ளதாக தி வயர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது
மேலும், குர்லேகர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கொலை வழக்கு பதியப்பட வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.
அகில் கோகோய் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக என்.ஐ.ஏ மேல்முறையீடு – கேள்விக்குறியாகிறதா நீதி?
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில், “என்.ஐ.ஏ மற்றும் சிறை கண்காணிப்பாளர் குர்லேகர் இருவரும் ஸ்டான் சுவாமியை சிறையில் சித்திரவதை செய்வதற்கான எந்த வாய்ப்பையும் இழக்கவில்லை” என்று கூறியுள்ளதாகவும் தி வயர் செய்தி குறிப்பிடுகிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.