Aran Sei

தடுப்புகளை மீறி டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் : தொடங்கவுள்ள டிராக்டர் பேரணி

த்திய அரசு கொண்டு வந்த மூன்று விவசாய சட்டங்களை நீக்க கோரி போராடி வரும் விவசாயிகள் குடியரசு தின டிராக்டர் பேரணியை அறிவித்திருந்தனர். அதில் பங்கேற்கவுள்ள டிராக்டர்கள் டெல்லி எல்லையில் இருந்து புறப்பட்டு டெல்லிக்குள் பேரணி தொடங்கும் பகுதிக்கு வந்து சேர தொடங்கியுள்ளன.

மத்திய டெல்லி பகுதிக்குள் பேரணி டிராக்டர்கள் நுழையாத வகையில் பல்வேறு தடுப்புகளை டெல்லி காவல்துறையினர் அமைத்துள்ளனர். முக்கியமாக, சிங்கு எல்லையிலிருந்து டெல்லிக்குள் நுழையும் கர்னால் புறவழிச்சாலையில் கன்டெய்னர் பெட்டிகளைக் கொண்டு தற்காலிகச் சுவரை காவல்துறையினர் உருவாக்கியுள்ளனர்.

1.5 லட்சம் டிராக்டர்களுடன் விவசாயிகளின் படை தயார் – அணிவகுப்பால் அதிரப்போகும் டெல்லி

இந்த டிராக்டர் பேரணியில் பங்கேற்க, காலையிலிருந்து நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் டெல்லி-ஹரியானா எல்லையான சிங்கு எல்லையில் குவியத் தொடங்கியுள்ளனர். பின்னர், சிங்கு எல்லையிலிருந்து புறப்பட்ட ஆயிரக்கணக்கான டிராக்டர்கள், கஞ்சவாலா சவுக், அச்சாண்டி எல்லை, கேஎம்பி ஜிடி சாலை வழியாக டெல்லிக்குள் நுழைந்துள்ளன.

மறுபுறம், சில்லா எல்லையிலிருந்து புறப்பட்ட ஏராளமான டிராக்டர்கள், டெல்லி-நொய்டா சாலை வழியாக  டெல்லியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. மேலும், திக்ரி எல்லையிலிருந்து புறப்பட்ட விவசாயிகளின் டிராக்டர்களும் டெல்லிக்குள் நுழைந்துள்ளன.

தலையில் சுமைகளுடன் போராட்ட களத்தில் திரளும் பெண்கள் – விவசாயிகள் போராட்டத்தின் மற்றொரு மையமாகும் மும்பை

திக்ரி எல்லையில் டெல்லி காவல்துறையினர் வைத்திருந்த தடுப்புகளையும் மீறி விவசாயிகள் சென்றுள்ளனர். திக்ரி எல்லையிலிருந்து நாங்கோலி, பாப்ரோலா கிராமம், நஜாப்கார்க், ஜரோடா எல்லை, ரோடக் புறவழிச்சாலை, அசோடா சோதனைச் சாவடி வழியாக டிராக்டர் பேரணி செல்லவே காவல்துறையினர் அனுமதியளித்திருந்தனர்.

டிராக்டர்களில் குடியரசு தினத்தைக் கொண்டாடும் விதத்தில் தேசியக் கொடியைக் கட்டி வைத்துள்ளனர். டெல்லி காவல்துறையின் சார்பில், ஆயிரக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Source – PTI

தடுப்புகளை மீறி டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் : தொடங்கவுள்ள டிராக்டர் பேரணி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்