நுபுர் சர்மாவின் அனைத்து வழக்குகளையும் டெல்லி காவல்துறைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் தனக்கு எதிராக வழக்குகள் இருப்பதால், தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றும், அனைத்து வழக்குகளையும் ஒரீடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்ற நுபுர் சர்மாவின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா கடந்த சில நாட்களுக்கு முன்பு நபிகள் நாயகம் குறித்து கூறிய கருத்துக்கள் சர்ச்சைக்கு உள்ளானது. இதையடுத்து அவர் தேசிய செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். வளைகுடா நாடுகளில் இருந்தும் இவரது கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது.
‘ஜனநாயக ஊடகம் இல்லாமல் ஜனநாயக சமூகத்தை உருவாக்க முடியாது’ – பத்திரிகையாளர் சுபைரோடு ஒரு நேர்காணல்
இதைத் தொடர்ந்து நாட்டிலும் பல்வேறு மாநிலங்களில் இவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. பாதுகாப்பு காரணங்களால் பல்வேறு மாநிலங்களுக்கு தன்னால் போகாது முடியாது என்றும், தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றும் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தார். எனவே, அனைத்து வழக்குகளையும் ஓரீடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தார்.
அவரது மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், நுபுர் சர்மா மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்வதற்கு டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என்று உத்தரவு பிறப்பித்தது. நுபுர் சர்மாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதால், இந்த உத்தரவு பிரப்பிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
ஆர்எஸ்எஸ் ஒரு உயர்சாதியினரின் சங்கம்; மோடி ஒரு சிறந்த நாடகக்காரர் – சித்தராமையா விமர்சனம்
கடந்த ஜூலை ஒன்றாம் தேதி உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அளித்து இருந்த உத்தரவில், நாடு முழுவதும் ஏற்பட்ட வன்முறைக்கு தனிப்பட்ட முறையில் நுபுர் சர்மாதான் காரணம் என்று கூறி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Times Of India
Kallakurichi Sakthi School maths teacher father files affidavit – VCK Rajinikanth Interview | BJP
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.