Aran Sei

டெல்லி கலவரத்தில் நடந்த கொலை: இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக சாட்சியளித்துள்ள இந்து குடும்பங்கள்

credits : the hindu

டெல்லி கலவரத்தின்போது கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ம் தேதி, வடகிழக்கு டெல்லியின் ஜாஃப்ராபாத் பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல் வன்முறையாக வெடித்தது. இதில் ஐம்பதற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 600-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்தக் கலவரத்தின்போது, நடந்த துப்பாக்கிச் சூட்டில் 25 வயதான ஷாஹித் அலாம் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் தொடர்புள்ளதாக ஜுனய்த், சந்த் முகமது, இர்ஷாத் ஆகியோர் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

டெல்லி கலவரம் – பயம் பாதுகாப்பின்மை காரணமாக பள்ளியை விட்டு மரசாக்களில் சேரும் மாணவர்கள்

இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் குமார் கெய்ட், ”ஒரு மதக்கலவரத்தின்போது, ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களுக்குள்ளேயே கொலை செய்து கொள்வார்கள் என்பது நம்பக்கூடியதாக இல்லை” என தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

டெல்லி கலவரம்: குற்றப்பத்திரிகையில் குளறுபடி – குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கு ஜாமீன்

மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் மூவருக்கும் ஆதரவாக சாட்சியளித்துள்ள முகேஷ், நாராயண், அர்விந்த் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், தங்கள் குடும்பங்களைப் பாதுகாத்து, கலவரம் நடந்த பகுதியிலிருந்து வேறு இடத்திற்கு செல்ல ஜுனய்த், சந்த் முகமது, இர்ஷாத் உதவியதாக கூறியதை நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளதாக தி வயரில் வெளியான செய்தி கூறியுள்ளது.

டெல்லி கலவரம் “தன்னெழுச்சியானது” – உள்துறை அமைச்சகத்தின் மீளாய்வு!

காவல்துறையின் விசாரணையில் வந்துள்ள தகவல்களும் பிரேத பரிசோதனையின் முடிவுகளும் முரணாக இருப்பதை குறிப்பிட்டுள்ள நீதிபதி, இந்த மூவரும் கொலையில் ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என கூறி அவர்களுக்கு  ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்தக் கொலையைச் செய்த உண்மையான குற்றவாளி இன்னும் கைது செய்யப்படவில்லை எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

டெல்லி கலவரத்தில் நடந்த கொலை: இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக சாட்சியளித்துள்ள இந்து குடும்பங்கள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்