Aran Sei

பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்த காவல்துறைக்கு உரிமை உண்டு – தீஷா ரவி வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து

தீஷா ரவியின் தனிமனித உரிமைகள் மீறப்படாத பட்சத்தில், பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்த காவல்துறைக்கு உரிமை உண்டு என, டெல்லி உயர்நீதிமன்றம் உத்திரவிட்டிருப்பதாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

டூல்கிட் வழக்கில் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் இருக்கும் தீஷா ரவி, விசாரணை குறித்த தகவல்களை வெளியிட, டெல்லி காவல்துறைக்கு தடை விதிக்க கோரி, தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு வழங்கப்பட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தாதவாறு, செய்தி நிறுவனங்களின் ஆசிரியர்கள் கொள்கைகளைக் கொண்டிருக்க வேண்டும் என, உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

‘அறுவை சிகிச்சை வெற்றி, ஆனால் நோயாளி காலியா?’ – வங்கி ஊழியர் தேர்வுக் கழகத்திற்கு சு.வெங்கடேசன் கேள்வி

”சரிபார்க்ககூடிய மற்றும் நம்பத் தகுந்த தகவல்களின் அடிப்படையிலேயே செய்திகள் ஒளிபரப்படுகிறது என ஊடக நிறுவனங்கள் உறுதிபடுத்த வேண்டும். சரிபார்க்கப்பட்ட செய்திகள் மட்டுமே ஒளிபரப்பட்டதை ஆசிரியர் குழு உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ள நீதிமன்றம், “செய்திக்கான மூலத்தை வெளியிடப் பத்திரிக்கையாளரைக் கேட்க முடியாது என்றாலும், ஆதாரங்கள் சரிபார்க்க கூடியதாகவும், உண்மையானதாகவும் இருப்பதை உறுதிபடுத்த வேண்டும்” எனக் கூறியிருப்பதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கைப் பொறுத்த வரை, “பரப்பரப்பான மற்றும் பாரபட்சமான நடைமுறைகளை ஊடக நிறுவனங்கள் கடைபிடித்திருப்பதை காண முடிகிறது” என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதாக அதில் குறிப்பிடபட்டுள்ளது.

உன்னாவ் சிறுமிகள் மரணம் – குடும்பத்தினர் மிரட்டப்படுகிறார்களா? – மறு பிரேதபரிசோதனை கோரும் சந்திரசேகர் ஆசாத்

இந்த வழக்கில் எந்த ஆவணமும், தகவலும் கசியவிடப்படவில்லை என நீதிமன்றத்தில் வாதத்தை முன்வைத்த, அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.வி.ராஜூ, ”காவல்துறையை இழிவுபடுத்த வேண்டும் மற்றும் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும், என்ற நோக்கில் மனு தொடரப்பட்டிருக்கிறது” என கூறியுள்ளதாக, அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்த காவல்துறைக்கு உரிமை உண்டு – தீஷா ரவி வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்