டெல்லி ஜஹாங்கீர்புரியில் ராமநவமி கலவரத்தில் பாதிக்கப்பட்ட இரு சமூக்கங்களைச் சேர்ந்த மக்களைச் சந்தித்து ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி கொள்ளச் செய்துள்ள உள்ளூர் அமைதிக் குழு ஒன்று, “இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க உறுதிசெய்தால்தான், அப்பகுதியில் அமைதியும் நல்லிணக்கமும் நிகழும்” என்று தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர் சந்திப்பின் போது அங்கிருந்த உள்ளூர் மக்கள், சகோதரத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 24) அப்பகுதியில் ‘திரங்கா யாத்திரை’ மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் ஹலால் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் – உச்சநீதிமன்றதில் பொதுநல மனு
இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்த தப்ரேஸ் கான், “நாங்கள் நல்லிணக்கத்துடன் வாழ விரும்புகிறோம். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் பார்த்துக் கொள்வோம்” என்று கூறியுள்ளார்.
இந்து சமூகத்தைச் சேர்ந்த குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் இந்தர் மணி திவாரி கூறுகையில், “இந்த (வன்முறை) சம்பவம் மிகவும் கவலையளிக்கிறது. வதந்திகளை நம்ப வேண்டாம். வகுப்புவாத மோதல்கள் முதல்முறையாக இங்கு நடந்துள்ளன. அவை மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ராஜஸ்தானில் கோயில் இடிப்பு விவகாரம் – பாஜகவின் ஒப்புதலோடுதான் இடிக்கப்பட்டதாக காங்கிரஸ் தகவல்
“நான் மகிழ்ச்சியடைகிறேன். இரு சமூகத்தினரிடையே அமைதி நிலைத்திருக்க வேண்டும். எச் மற்றும் ஜி பிளாக்குகளில் கடைகளைத் திறப்பதை நான் ஒருபோதும் நிறுத்தவில்லை. இந்தக் கடைகள் ஏன் மூடப்படுகின்றன என்று எனக்குத் தெரியவில்லை. இந்தத் தொகுதிகளில் கடைகள் மற்றும் வணிகங்களைத் திறக்க நாங்கள் வசதி செய்வோம்” என்று காவல்துறை உதவி ஆணையர் உஷா ரங்கனானி கூறியுள்ளார்.
Source:ndtv
Pattali Episode 1 : உழைக்கும் மக்களின் வாழ்க்கையைப் பேசும் ஒரு தொடர்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.