சூழலியல் செயல்பாட்டாளர் தீஷா ரவி மீதான விசாரணை விவரங்களை, ஊடகங்களுக்கு வழங்க டெல்லி காவல்துறைக்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
டூல்கிட் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் இருக்கும் தீஷா ரவி சர்பாக, வழக்கின் விவரங்களை ஊடகங்களுக்கு வெளியிடத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீஷா ரவியிடமிருந்து அவரது செல்போன் மற்றும் லேப்டாப்பை பிப்ரவரி 13, 2021 ஆம் தேதி காலை 11 மணிக்குக் காவல்துறை கைப்பற்றியதையடுத்து, அதைத் தீஷாவால் பயன்படுத்த முடியவில்லை என்றும், ”அதில் இருக்கும் தீஷாவின் தனிப்பட்ட உரையாடல் தொடர்பான தகவல்களை அணுகும் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, அதை வெளியிடும்பட்சத்தில் அது அறிவாற்றல் குற்றமாகும்” என்றும், தீஷாவின் தனிப்பட்ட உரையாடல்களை ஊடக நிறுவனங்கள் வெளியிடுவது, கேபிள் தொலைக்காட்சிகள் வலைபின்னல் (ஒழுங்குமுறை) சட்டம், 1995 (சி.டி.என் சட்டம்) கூறியிருக்கும் வழிகாட்டுதல்களை மீறும் செயல் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்த்தாக, தி வயர் கூறியுள்ளது
ஒரே இரவில் அனைத்து செய்திகளையும் முடக்கிய ஃபேஸ்புக் – ஆஸ்திரேலிய அரசு அதிர்ச்சி
மனுவை விசாரித்த நீதிபதி பிரதிபா எம். சிங், தீஷாவின் உரையாடல்களை வெளியிட்டது தொடர்பாக, சில ஊடக நிறுவனங்களுக்கும், செய்தி ஒளிபரப்பு தர நிர்ணய ஆணையத்திற்கும் நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, காவல்துறை எந்த விசாரணை தகவலையும் வெளியிடவில்லை என, அரசின் தலைமை வழக்கறிஞர் துசார் மேத்தா, நீதிமன்றத்தில் தெரிவித்ததாக, தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.