இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 – ன் கீழ் குறை தீர்க்கும் அதிகாரியை நியமிக்கும் காலக்கெடுவை கொண்டு வர ட்விட்டர் நிறுவனத்திற்கு இரண்டு நாட்கள் காலக்கெடு வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
”இது இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது… ஒரு வேளை இடைக்கால குறைதீர்க்கும் அதிகாரி ஜூன் 21 ஆம் தேதி விலகிவிட்டால், அடுத்த 14 நாட்களுக்கு ட்விட்டர் நியமிக்கும் என எதிர்பாக்கப்படுகிறது” என நீதிபதி ரேகா பள்ளி தெரிவித்துள்ளார்.
2021 ஆன் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு இணங்கவில்லை என ட்விட்டர் ஒப்புக்கொண்டது. மேலும், குறைதீர்க்கும் அதிகாரி மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்கும் பணியில் உள்ளது.
”குறை தீர்க்கும் அதிகாரியை நியமிக்க எவ்வளவு காலம் எடுக்கும்?. இந்தியாவில் எத்தனை காலம் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம் என ட்விட்டர் நினைக்கிறது. அதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்?” என நீதிபதி ரேகா எச்சரித்துள்ளார்.
மக்களுக்காக வாழ்வை அர்பணித்த பழங்குடியின உரிமை போராளி ஸ்டான் சாமி – கைது முதல் மரணம் வரை
குறைதீர்க்கும் அதிகாரியை நியமிப்பது தொடர்பான காலக்கெடுவை வழக்கின் அடுத்த விசாரணையான ஜூலை 8 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும், இல்லையென்றால் ட்விட்டர் நிறுவனத்திற்கு சிக்கல் ஏற்படும் என நீதிபதி எச்சரித்துள்ளார்.
ட்விட்டர் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் சஜன் பூவய்யா, “குறைதீர்ப்பு அதிகாரியின் நியமனத்தை முடிப்பதற்கான குறிப்பிட்ட காலக்கெடுவை தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் என கோரியிருந்தார்.
ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான சேத்தன் சர்மா, “புதிய விதிகள் நடைமுறைக்கு வந்து 42 நாட்கள் ஆகியும் ட்விட்டர் தகவல் தொழில்நுட்ப விதிகளை பின்பற்றவில்லை. முகநூல் 3 கோடி உள்ளடக்கங்களை நீக்கியுள்ளது, இன்ஸ்டாகிராம் 18 உள்ளடக்கங்களை நீக்கியுள்ளது, கூகுள் 3 லட்சம் உள்ளடக்கங்களை நீக்கியுள்ளது. ட்விட்டர் நிறுவனம் நிச்சயமாக சிறப்பாக செயல்பட முடியும்” என தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.