கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து, தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தில் உள்ள ஏழு பதவிகளில் ஆறு பதவிகள் ஏன் காலியாகவே உள்ளன என்பதற்கு விளக்கம் அளிக்குமாறு, மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (பிப்ரவரி 15), அக்காலியிடங்களை நிரப்பக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி பிரதிபா எம் சிங், இதுகுறித்து 10 நாட்களில் நிலை அறிக்கை தாக்கல் செய்யுமாறு, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஆணையத்தில் உள்ள ஏழு பதவிகளில் ஆறு பதவிகள் ஏன் இத்தனை நாள் காலியாக இருந்தன என்பதை அமைச்சகம் விளக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைக் களமாக மாறியுள்ளது இந்தியா – ஆய்வு முடிவு
ஆணையத்தின் துணைத் தலைவர் பதவி மட்டுமே, கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது என்றும், சில பதவிகள் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தும், சில பதவிகள் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்தும் காலியாக உள்ளன என்றும், அபய் ரத்தன் பௌத் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இக்காலியிடங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்ற போதிலும், அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.