Aran Sei

டெல்லி: ஜேஎன்யுவில் தமிழ் இலக்கியவியல் எனும் தனித்துறை தொடங்க 5 கோடி நிதி வழங்கிய தமிழக அரசு

டெல்லி உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் எனும் தனித்துறை தொடங்கிட தமிழ்நாடு அரசு ரூபாய் 5கோடி நிதி வழங்கி ஆணையிட்டுள்ளது.

டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிகள் மையத்தில் தமிழ்ப்பிரிவு, இந்திப்பிரிவு, உருதுப்பிரிவு, இந்தி மொழியாக்கப்பிரிவு, கன்னட மொழி இருக்கை ஆகிய அமைப்புகளைக் கொண்டு இயங்குகின்றது. பல்கலைக்கழக நிதிநல்கைக்குழு வாயிலாக பேராசிரியர் ஒருவரும் தமிழ்நாடு அரசின் நிதி நல்கையின் வாயிலாக உதவிப்பேராசிரியர் ஒருவரும் நியமிக்கப் பெற்று 2007 முதல் பணியாற்றி வருகின்றனர்.

சாப்பிட்டு விட்டு பணம் தர மறுப்பு – உணவகத்திற்கு சீல் வைத்து விடுவோம் என்று மிரட்டிய இந்து முன்னணி நிர்வாகிகள் கைது

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இந்திய மொழிகள் பிரிவில் தமிழ் பிரிவு என்று தனியாக இயங்கி வந்த சூழலில் தமிழக அரசு ரூ. 5கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதன் வாயிலாக தனித்துறையாக செயல்பட உள்ளது.

தனிப்பெரும் துறையாக உருவெடுக்கும் தமிழ் இலக்கியவியல் துறை வாயிலாக ஒப்பாய்வு, முதுகலை தமிழிலக்கியப் படிப்பு, வல்லுநர்வழி மொழியாக்கம், முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு புத்தாக்கப்பயிற்சி, தமிழாசிரியர்களுய்க்கு ஆய்வுப் பயிலரங்கம், ஜே என் யூ தமிழியல் எனும் பெயரில் 100 பக்க அளவில் ஆண்டுக்கு இருமுறை ஆய்வு இதழ் வெளியிடுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிகிறது.

மாட்டிறைச்சி பிடிக்கும் என கூறிய நடிகர் ரன்பீர் கபூர் – கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்த பஜ்ரங் தளம் அமைப்பினர்

வட இந்தியாவில் தொடங்கப்படும் முதல் தமிழ்த்துறையாகவும் தமிழாய்வுகளை விரைந்தும் விரிந்தும் செய்யும் பெருமிதமும் தனித்தியங்கும் தன்மையும் கொண்டு உலக அளவில் கவனம் பெறும் துறையாக தமிழ் இலக்கியவியல் துறை மாறும் என தமிழ் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

Maruthaiyan Kamaraj Detailed Discussion on All Caste Priest Issue and Brahminical Conspiracy

டெல்லி: ஜேஎன்யுவில் தமிழ் இலக்கியவியல் எனும் தனித்துறை தொடங்க 5 கோடி நிதி வழங்கிய தமிழக அரசு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்