டூல்கிட் வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் 22 வயதான சூழலியல் செயல்பாட்டாளர் தீஷா ரவிக்கு, ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தீஷா ரவிக்கு வழங்கப்பட்டிருந்த ஒரு நாள் போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்திர ரானா, தீஷா ரவிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருப்பதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, தீஷா ரவி தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பு, இன்று (பிப்ரவரி 23) ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
‘வந்தே மாதரம் பவன்’ சிதலமடைந்திருப்பதாக மோடி குற்றச்சாட்டு – உண்மை என்ன ?
விவசாயிகள் போராட்டம் தொடர்பான டூல்கிட் (விவர ஆவணம்) ஒன்றை, ஸ்வீடனை சேர்ந்த சூழலியல் செயல்பாட்டாளர் கிரெட்டா தன்பர்க் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்த அவர்மீது டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த டூல்கிட்-ஐ பயன்படுத்தினார் என்ற அடிப்படையில் சூழலியல் செயல்பாட்டாளர் தீஷா ரவி, வழக்கறிஞர் நிகிதா ஜேக்கப் மற்றும் சூழலியல் செயல்பாட்டாளர் சாந்தனு முலுக் மீது டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
இதில் தீஷா ரவியை பெங்களூருவில் பிப்ரவரி 13 ஆம் தேதி கைது செய்த நிலையில், நிகிதா ஜேக்கப் மற்றும் சாந்தனு முலுக் முன்ஜாமீன் பெற்றனர்.
கூட்டணியில் இருந்துகொண்டு, மத்திய அரசை விமர்சிப்பது ஏன்? – பட்ஜெட் குறித்து எதிர்கட்சிகள் கருத்து
தீஷா ரவியிடம் டெல்லி காவல்துறை, மேற்கொண்ட 5 நாட்கள் விசாரணை முடிந்து பிப்ரவரி 19 ஆம் தேதி, டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தீஷா ரவிக்கு மூன்று நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டிருந்தது.
மூன்று நாள் காவல் நேற்று (பிப்ரவரி 22) முடிவடைந்த நிலையில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்ற இருவருடன் சேர்த்து தீஷா ரவியை விசாரிக்க வேண்டும் என டெல்லி காவல்துறை கோரியதை அடுத்து அவருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.