Aran Sei

அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான மனு – ஒன்றிய அரசு பதிலளிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு

Image Credits: India TV News

க்னிபாத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் தொடர்பாக ஒன்றிய அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

முப்படைகளில் 17.5 வயது முதல் 21 வரையிலானவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நான்கு ஆண்டுகள் பணிபுரியும் அக்னிபாத் திட்டத்தை ஒன்றிய அரசு கடந்த ஜூன் 14-ம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் வேலைக்கு தேர்வு செய்யப்படுவோரில் 25 சதவீதம் பேர் மேலும் 15 ஆண்டுகளுக்கு பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் நீட் பயிற்சி பெற்ற மாணவர்கள் இருக்கிறார்களே தவிர மருத்துவர்கள் இல்லை – பேராசிரியர் கபீர் சர்தானா

பின்னர், இளைஞர்களுக்கான வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் இந்த திட்டத்தில் வேலையில் சேருவதற்கான அதிகபட்ச வயது வரம்பு 21-லிருந்து 23-ஆக அதிகரிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் சேரும் ராணுவ வீரர்கள் “அக்னிவீர்” என அழைக்கப்படுவர் என்று ஒன்றிய  அரசு தெரிவித்தது.

ஒப்பந்தகால அடிப்படையில் ராணுவத்தில் பணியாற்றும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தன.

சாதிப் பாகுபாடு சர்ச்சை: பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர் அனுராதா இடைநீக்கம்

இந்த மனுக்கள் மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று நடை பெற்றது. அப்போது, திட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சகங்களிடம் பதிலைப் பெற்று ஒன்றிய  அரசு 4 வாரங் களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். எனினும், ஜூன் காலகட்டத்தில் நாடு முழுவதும் மிகப்பெரிய அளவிலான போராட்டங்களுக்கு வழிவகுத்த அக்னிபாத் திட்டத்துக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Source: The Hindu

அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான மனு – ஒன்றிய அரசு பதிலளிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்