பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டது தொடர்பாக ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் அர்னப் கோஸ்வாமி மற்றும் ஆசிரியர் அனன்யா வர்மாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வழக்கின் அடுத்த விசாரணையை ஜனவரி 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துக் கூடுதல் குடிமை நீதிபதி சீதல் சௌத்ரி பிரதான் உத்தரவிட்டுள்ளார்.
அவதூறாக செய்தி வெளியிட்டதற்காக ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு மற்றும் எதிர்காலத்தில் இது போன்ற செய்திகள் வெளியிடமாட்டோம் என்ற உறுதி மொழி ஆகியவை அளிக்கக் கோரி பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு வழக்கு தொடர்ந்திருந்தது.
அசாம் வன்முறை தொடர்பாக பாப்புலர் பிரண்ட ஆஃப் இந்தியாவிற்கு தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டதாக இரண்டு செய்திகளை ரிபப்ளிக் டிவி வெளியிட்டிருந்தது.
இந்த செய்திகளை மறுத்திருக்கும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா நிறுவனம், கைது செய்யப்பட்டவர்களுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என வழக்கில் குறிப்பிட்டுருந்தது.
Source : Bar and Bench
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.