Aran Sei

கர்ப்பிணி பெண்களுக்கு பணி நியமனம் மறுப்பது ஏன் – இந்தியன் வங்கிக்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ்

மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாத கர்ப்பிணியான ஒரு பெண்ணிற்கு உடனடியாக பணியில் சேர மறுக்கும் “புதிய ஆட்சேர்ப்பு விதிகளை” திரும்பப் பெறக் கோரி இந்தியன் வங்கிக்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்தியன் வங்கி அண்மையில் புதிய பணி நியமனம் பெறுபவர்களின் உடல்நலத் தகுதி குறித்து வெளியிட்டிருந்த வழிகாட்டல்கள் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. அந்த வழிகாட்டுதலில், மருத்துவப் பரிசோதனையின்போது 12 வாரங்கள் அல்லது அதற்கு மேல் கருவுற்ற காலத்தைக் கடந்திருப்பது தெரியவரும் பட்சத்தில், பிரசவத்துக்கு பிந்தைய ஓய்வுக்காலம் வரையிலும், அவர் பணி நியமனம் பெற தற்காலிகமாகத் தகுதியற்றவர் என்று கருதப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசியப் பாதுகாப்பு அகாடமியில் பெண்கள் – தகர்ந்தது பாலின பாகுபாடு

பிரசவம் முடிந்து 6 வாரங்கள் நிறைவு பெற்ற பின்னர், பதிவு செய்யப்பட்ட மருத்துவரிடமிருந்து உடல்நலத் தகுதி பெற்று சமர்ப்பிக்கப்பட்டால், அவர் மீண்டும் மருத்துவப் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு உடல்நலத் தகுதி உறுதி செய்யப்பட வேண்டும்’ என இந்த வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தியன் வங்கியின் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பாலின பாரபட்சத்தோடு உருவாக்கப்பட்டிருப்பதாக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இச்சூழலில், புதிய ஆட்சேர்ப்பு விதிகளை திரும்பப் பெறக் கோரி டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் இந்தியன் வங்கிக்கு இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கப் பள்ளிகளிலேயே நடவடிக்கையென கேரள அரசு அறிவிப்பு – பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டுமென திமுக எம்.பி கனிமொழி வேண்டுகோள்

“இது நமது சமூகத்தில் இன்னும் நிலவும் ஆணாதிக்க மனப்பான்மையையும், பெண்ணடிமைத்தனத்தையும் பிரதிபலிக்கிறது. இந்த விதிகள் பாரபட்சமானவை மற்றும் சட்டவிரோதமானவை மற்றும் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும். மேலும், எதிர்காலத்தில் இது போன்ற வழிகாட்டுதல்களை வங்கிகள் வெளியிடப்படாமல் இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் ரிசர்வ் வங்கி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் அந்த நோட்டீசில் தெரிவித்துள்ளார்.

மேலும் அதில், இந்த விதிமுறை ‘சமூகப் பாதுகாப்புக் குறியீடு 2020’இன் கீழ் வழங்கப்படும் மகப்பேறு நலனுக்கு எதிரானது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், இந்த வழிகாட்டு நெறிமுறைகள் எதனடிப்படையில் உருவாக்கப்பட்டிகிறது என்பது குறித்து விளக்கம் அளிக்கவும் டெல்லி மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியன் வங்கியின் இந்த முடிவு பெண்களுக்கு எதிரானது என்று ஏற்கனவே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டித்துள்ளது.

Source : NDTV

பற்ற வைத்த வட இந்தியர்கள் அஞ்சி நடுங்கும் பாஜக | Agnipath

கர்ப்பிணி பெண்களுக்கு பணி நியமனம் மறுப்பது ஏன் – இந்தியன் வங்கிக்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்