Aran Sei

வீடுகளின் மீது புல்டோசர் ஏற்றுவது சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அழிவு – டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

Image credit : indianexpress.com

வீடுகளை இடிக்க புல்டோசர்களை பயன்படுத்துவது சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அழிவு என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

காணொளி காட்சி வழியாக பேசிய அவர், “டெல்லி மக்களின் வீடுகள் மற்றும் கடைகளை பாஜக அழிக்கும் விதம் சரியானதல்ல. 63 லட்சம் மக்களின் வீடுகள் அல்லது கடைகள்மீது புல்டோசர் பயன்படுத்த முடியும். இது சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அழிவு” என்று அவர் கூறியுள்ளார்.

ம.பி: பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் கட்டப்பட்ட வீடு – ஆக்கிரமிப்பு என்ற பெயரில் புல்டோசர் கொண்டு இடித்த அதிகாரிகள்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்களின் மையமாக விளங்கிய ஷாஹின்பாக் பகுதியில், கடந்த வாரம் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் வீடுகள் இடிக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்புகள் வலுத்த நிலையில், உச்சநீதிமன்ற தலையீட்டால் இடிக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது.

கடந்த சில வாரங்களாக, டெல்லியின் பல பகுதிகளில் புல்டோசோர் கொண்டு கட்டடங்களை இடிக்கும் பணியைப் பாஜக ஆளும் மாநகராட்சி நிர்வாகங்கள் மேற்கொள்கின்றன. இது வரும் மாதங்களில் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமித்துக் கட்டியதை எல்லாம் இடித்து வருவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புல்டோசர் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்த கர்நாடகா ஒன்றும் உத்திரபிரேதம் அல்ல: கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் கருத்து

”நாங்களும் ஆக்கிரமிப்புகள் நடப்பதை விரும்பவில்லை… ஆனால், கடந்த பல ஆண்டுகளாக டெல்லி வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆக்கிரமிப்பை அகற்றுவது என்றால் 80 விழுக்காட்டினரை அகற்ற வேண்டி வரும்” என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Source: Hindustan Times

தமிழர்கள் கொல்லப்படும்போது Modi என்ன செஞ்சாரு? Seeman | Annamalai | Mullivaikkal Ninaiventhal

 

வீடுகளின் மீது புல்டோசர் ஏற்றுவது சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அழிவு – டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்