Aran Sei

டெல்லி: பொது கழிவறையில் ‘அவுரங்கசீப் தலைமையகம்’ என்று போஸ்டர் ஒட்டிய பாஜக பிரமுகர்

Credit: Hindu Tamil

டெல்லியின் உத்தம்நகரில் உள்ள ஒரு பொது கழிவறையில் ‘அவுரங்கசீப் தலைமையகம்’ என்று பாஜக பிரமுகர் அச்சல் சர்மா போஸ்டர் ஒட்டியுள்ளார்.

அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “எனது தொகுதியில் உள்ள அனைத்து பொது கழிவறைக்கு ‘அவுங்கசீப் தலைமையகம்’ எனப் பெயரிட வேண்டும் என இந்துக்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலின் போலேநாத்தை அவுரங்கசீப் என்ன செய்தார்  என்பது அனைவருக்கும் தெரியும். அதற்கு தற்போது இந்துக்கள் பதிலளிக்கத் தயாராக உள்ளனர்” என்று கூறியுள்ளார்.

கியானவாபி: சிவலிங்கம் பற்றி கருத்து கூறி கைதான தலித் பேராசிரியர் – வெறுப்பைத் தூண்டும் வகையில் அவர் பேசவில்லையென பிணை வழங்கிய நீதிமன்றம்

உத்தரபிரதேசம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்து கியானவாபி மசூதி கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் மசூதியின் சுவற்றில் இருக்கும் இந்துக் கடவுள்களை வழிபட அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டது.

இதை ஏற்ற நீதிமன்றம் மசூதி வளாகத்திற்குள் ஆய்வு நடத்த உத்தரவிட்டது. அதில் மசூதியின் ஓசுகானா (குளத்தில்) நடுவே சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் டெல்லியில் பொது கழிவறையில் அவுரங்கசீப் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இருப்பினும், இது தொடர்பாக யாரும் புகார் தெரிவிக்காததால், வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

Source: The Hindu Tamil

Nenjukku Needhi Review I சாதி வெறியர்களுக்கு செருப்படி I VCK Vikraman Interview I Arunraja Kamraj

டெல்லி: பொது கழிவறையில் ‘அவுரங்கசீப் தலைமையகம்’ என்று போஸ்டர் ஒட்டிய பாஜக பிரமுகர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்