Aran Sei

டெல்லி: வலதுசாரிகளின் எதிர்ப்பினால் இஸ்லாமிய சிந்தைனையாளர்கள் குறித்த பாடத்திட்டத்தை நீக்கிய அலிகர் இஸ்லாமிய பல்கலைக்கழகம்

லது சாரிகளின் எதிர்ப்பால் இஸ்லாமிய சிந்தனையாளர்களான மௌலானா சையத் அபுல் அலா மௌதூதி மற்றும் சையத் குதுப் ஷஹீத் பற்றிய பாடங்களை கைவிட அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கழகம், ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட அரசு நிதியுதவி பெறும் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படும் இஸ்லாமிய சிந்தனையாளர்களின் கருத்துக்கு எதிராக சில வலதுசாரி கருத்தியல்வாதிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியதை அடுத்து இந்த முடிவு வந்துள்ளது.

ஆக்கிரமிப்பு இடத்துக்கு மாற்றாக இடம் வழங்குவதை ஏற்க முடியாது – சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திற்கு எதிராக தமிழக அரசு நோட்டீஸ்

அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் பேராசிரியர் ஷஃபே கித்வாய் கூறுகையில், “சர்ச்சையைத் தவிர்ப்பதற்காக, மௌதூதி மற்றும் ஷஹீத் உள்ளிட்ட இஸ்லாமிய சிந்தனையாளர்கள் குறித்த பாடத்திட்டத்தை நீக்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

ஜூலை 27 அன்று பகிரங்கமான கடிதத்தில் மது கிஷ்வர் உட்பட 22 பேராசிரியர்கள் மற்றும் ஆர்வலர்கள் கையெழுத்திட்டனர். இந்தியாவில் பிறந்தாலும், பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்த மௌதூதி, இந்தியாவின் மொத்த இஸ்லாமியமயமாக்கலுக்கு உறுதியளித்த ஜமாத்-இ-இஸ்லாமியின் நிறுவனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அல்-கொய்தா, ஐஎஸ்ஐஎஸ், ஹமாஸ், ஹிஸ்புல்லா, முஸ்லீம் பிரதர்ஹுட், தலிபான் போன்ற சர்வதேச அளவில் நியமிக்கப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கள், மௌதூதியின் அடிப்படை சித்தாந்தம் மற்றும் அரசியல் இஸ்லாத்தின் கட்டமைப்பிலிருந்து தொடர்ந்து உத்வேகம் செலுத்தி வருவதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்க்ப்பட்டுள்ளது.

உ.பி.: பள்ளியின் அசெம்பிளியில் இஸ்லாமிய வசனம் இருந்ததால் வலதுசாரிகள் போராட்டம் – காயத்ரி மந்திரம் ஓதியதால் போராட்டம் வாபஸ்

இந்த முடிவு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒரு பகுதியினரிடையே கோபத்தை உருவாக்கியது. “நான் கடந்த 50 ஆண்டுகளாக மௌதூதியை படித்து வருகிறேன், ஆனால் வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு வரி கூட என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை” என்று பேராசிரியர் ஒபைதுல்லா ஃபஹத் கூறியுள்ளார்.

20 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய இஸ்லாமிய  அறிஞர் மௌதூதி என்று வர்ணித்த பேராசிரியர் ஃபஹத், மௌதூதி நமது நபிகள் நாயகம் கூறிய இஸ்லாத்திற்காக உழைத்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

அயூப் கானின் ஆட்சியின் போது அவர் சிறையில் அடைக்கப்பட்டபோதும் அவரது வழிமுறைகள் ஜனநாயகமான, அமைதியான மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி இருந்தன. மேற்கத்திய காலனித்துவத்திற்கு எதிரான கடுமையான குரல்களில் ஒருவராக வெளிப்பட்டதால் மௌதூதி தாக்கப்படுகிறார். அதனால்தான் அவரது எழுத்துக்கள் அமெரிக்காவிலும் சில ஐரோப்பிய நாடுகளிலும் அச்சுறுத்தலாகக் கருதப்படுகின்றன,” என்று பேராசிரியர் ஃபஹத் கூறியுள்ளார்.

பெரியார் சிலையை உடையுங்களென காணொளி வெளியிட்ட பாஜக நிர்வாகி – கைது செய்த காவல்துறை

மாணவர் தலைவர் முகமட் அமீர் மின்டோ கூறுகையில், யாரோ கடிதம் எழுதியதால் மத்திய பல்கலைக்கழகம் பாடத்திட்டத்தை மாற்றக்கூடாது. “பாடத்திட்டத்தை மாற்றுவதற்கான ஒரு செயல்முறை உள்ளது மற்றும் சில தனிநபர்களின் விருப்பு வெறுப்பின் காரணமாக அதைக் குழப்பக்கூடாது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source: TheHindu

Nirmala Sitharaman vs Tamilnadu MPs in Parliament | Kanimozhi | Ptr palanivel | annamalai | Aransei

டெல்லி: வலதுசாரிகளின் எதிர்ப்பினால் இஸ்லாமிய சிந்தைனையாளர்கள் குறித்த பாடத்திட்டத்தை நீக்கிய அலிகர் இஸ்லாமிய பல்கலைக்கழகம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்