தீஷா ரவி கிறிஸ்துவராக இருந்தால் என்ன? இந்துவாக இருந்தால் என்ன? அவர் ஒரு இயற்கை ஆர்வலர், அவருக்கு அனைத்து சமுதாயங்களிலிருந்தும் நண்பர்கள் உள்ளனர் என தீஷா ரவியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
“நாம் ஏன் விவசாயிகள் போராட்டம் குறித்து பேசுவதில்லை” என, உலக புகழ் பெற்ற பாப் இசைக் கலைஞரான ரிஹான்னாவின் ட்விட்டர் பதிவுக்குப் பின்னர், விவசாயிகள் போராட்டம் சர்வதேச கவனத்தை பெற்றது.
ரிஹான்னாவை தொடர்ந்து அமண்டா கெர்னி, மியா காலிஃபா, வனேசா நகடே, லிசி கங்குஜம், மீனா ஹாரிஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்தனர்.
தீஷா ரவி கைது: போலி செய்தியை பரப்பும் பாஜக தொழிற்நுட்ப அணியை கைது செய்யுங்கள் – மம்தா கருத்து
ஸ்வீடனைச் சேர்ந்த பருவநிலை செயல்பாட்டாளரான கிரேட்டா துன்பெர்க், இந்தியாவில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு வழிகாட்டும், “டூல்-கிட்” (வழிகாட்டு ஆவணம்) ஒன்றை பகிர்ந்திருந்தது தொடர்பாக, அவர் மீது டெல்லி காவல்துறை தேசவிரோத வழக்கை பதிவு செய்தது.
‘தீஷாவை கொலை செய்ய அழைப்பு விடுக்கும் பாஜக அமைச்சர்’ – காஷ்மீர் எழுத்தாளர் அமான் குற்றச்சாட்டு
கிரெட்ட பகிர்ந்த அந்த டூல் கிட்டை திருத்தி வெளியிட்ட காரணத்திற்காக, 22 வயது சூழலியல் செயல்பாட்டாளர் தீஷா ரவி, டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
தீஷா ரவியின் கைதுக்கு அரசியல் தலைவர்கள், எதிர்கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்கள், இயற்கை ஆர்வலர்கள் என பலர் தங்களின் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
தீஷா ரவி கைது – அகிலேஷ் யாதவ், ஜிக்னேஷ் மேவானி, சசி தரூர், கவிதா கிருஷ்ணன் கண்டனம்
இந்நிலையில், தீஷா ரவியின் முழுப்பெயர் தீஷா ரவி ஜோசப் எனவும், அவர் கேரளாவைச் சேர்ந்த கிறிஸ்துவர் எனவும், ட்விட்டரில் பலர் பதிவு செய்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, ‘தீஷா ரவி ஜோசப்’ (#disharavijospeh) எனும் ஹேஷ்டேக் தற்போது வைரலாகிவுள்ளது.
Conversion Mafia Missionaries Peter Fredrick, Nikita Jacob, Disha Ravi Joseph Ganged Up With Foreign Enemies to Disrupt Our Nations Peace and Create a Bad Name for Our India.
Actually these Cheap Rice Bag Converts are The Biggest Disgrace. pic.twitter.com/bAztQ8v72G— Ram (@Ramaswamie) February 17, 2021
இது தொடர்பாக பேசியுள்ள தீஷா ரவியின் வழக்கறிஞர் பிரசன்னா, ” தீஷாவின் மத அடையாளம் ஒரு பொருட்டே அல்ல. அவர் கிறிஸ்துவராக இருந்தால் என்ன? இந்துவாக இருந்தால் என்ன? அவர் ஒரு இயற்கை ஆர்வலர், அவருக்கு அனைத்து சமுதாயங்களிலிருந்தும் நண்பர்கள் உள்ளனர். அவர் லிங்காயத்து குடும்ப பின்னணியிலிருந்து வந்திருந்தாலும் அவர் எந்த மதத்தையும் பின்பற்றவில்லை. அவருடைய மத பின்புலம் தொடர்பாக விவாதிப்பதே அபத்தமாக இருக்கிறது. ஆனால் அவரை ஒரு மத அடையாளத்திற்குள் சுருக்கி வெறுப்பை பரப்புவதால் இதை விளக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம்” என தெரிவித்துள்ளதாக தி நியூஸ் மினிட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் தும்குர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவி மற்றும் மஞ்சுலா நஞ்சையா தம்பதியரின் மகள் தீஷா அனப்பா ரவி (தீஷா ஏ ரவி) எனவும், தீஷா ரவியின் வழக்கறிஞர் பிரசன்னா தெரிவித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.