ஷாருக்கான் தீபிகா படுகோனே நடிப்பில் வெளிக்கவுள்ள பதான் திரைப்படத்தில் இடப்பெற்றுள்ள ஒரு பாடல் காட்சியில் காவி நிற உடையில் தீபிகா படுகோனே நடித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாஜகவினரும் இந்துத்துவ தலைவர்களும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
.
இந்நிலையில், இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள திரைக்கலைஞர் திவ்யா ஸ்பந்தனா, “சமந்தா தனது விவாகரத்துக்காகவும், சாய் பல்லவி அரசியல் ரீதியாக தனது கருத்தை தெரிவித்ததற்காகவும், ராஷ்மிகா மந்தனா தனது கருத்தை வெளிப்படையாக பேசியதற்காகவும், தீபிகா படுகோனே அவரது ஆடைக்காகவும், அவர்களைப் போல பல பெண்கள் ட்ரோல் செய்யப்படுகின்றனர். தேர்வு சுதந்திரம் நமது அடிப்படை உரிமை. பெண்கள் மாதுர்காவின் உருவகம் கொண்டவர்கள். பெண்கள் மீதான வெறுப்புக்கு எதிராக நாம் போராட வேண்டும். பெண் வெறுப்பு போராட வேண்டிய ஒரு தீமை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கன்னடத்தில் அபி திரைப்படம் மூலம் அறிமுகமான திவ்யா, தமிழில் சிம்புவுடன் குத்து படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் நடித்துள்ள திய்வா, ஒருகட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தார். தற்போது படத் தயாரிப்புகளில் கவனம் செலுத்தி வரும் திவ்யா, நடிகைகள் மீதான சர்ச்சைகள் குறித்து காட்டமாக ட்வீட் செய்துள்ளார். திய்வா ஸ்பந்தனாவின் இந்த டிவிட்டர் பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
சமந்தா, நாக சைத்தன்யாவை பிரிவதாக அறிவித்த போது, அவர் மீது ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன. நெட்டிசன்கள் அவரது தனிப்பட்ட விருப்பம் குறித்து கொச்சையாக கருத்து தெரிவித்து ட்ரோல் செய்திருந்தனர். அதேபோல் சாய் பல்லவியும் குறிப்பிட்ட ஒரு இனம் சார்ந்த மக்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பது குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இதற்காக அவர் மீதும் அரசியல் தொடர்புள்ள சில அமைப்புகள் ட்ரோல் செய்திருந்தனர். இந்த விமர்சனங்கள் பற்றி சமந்தாவும் சாய் பல்லவியும் அப்போது விளக்கம் கொடுத்திருந்தனர்.
அண்மையில் நடிகை ராஷ்மிகா மந்தனா மீதும் கன்னட திரையுலகிலிருந்து ஏராளமான விமர்சனங்கள் வந்தன. காந்தாரா படம் குறித்து அவர் பேசியிருந்தது தொடர்பாக அவர் விமர்சிக்கப்பட்டார்.
Annamalai honey trap technique Exposed | Amar Prasad | Gayathri Raghuram | Trichy Surya siva | Daisy
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.