Aran Sei

தீபிகா படுகோனின் பிகினி சர்ச்சை: “இப்போது கால்பந்து உலகக்கோப்பையை தடை செய்வீர்களா?” – திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ் கேள்வி

நேற்று நடந்த உலகக் கோப்பை கால்பந்து ஆட்டத்தின் இறுதிப் போட்டியில் கலந்துகொண்டு உலகக் கோப்பையை நடிகை தீபிகா படுகோனே அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்த அங்கீகாரம் பெறும் முதல் இந்திய நட்சத்திரம் என்ற பெருமையை தீபிகா படுகோனே பெற்றுள்ளார்.

இந்நிகழ்வை குறிப்பிட்டு ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரகாஷ் ராஜ், “தீபிகா படுகொலை நினைத்து பெருமையாக உள்ளது. பதான் திரைப்படத்தில் காவி நிற உடை அணிந்து நடனமாடியதால் படத்தை தடை செய்ய வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்தவர்கள், இப்போது கால்பந்து உலகக்கோப்பையை தடை செய்வார்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தீபிகா படுகோனின் காவி பிகினி சர்ச்சை: காவி உடை அணிந்து வன்கொடுமை செய்வது சரியா? – இந்துத்துவ அமைப்பினரின் எதிர்ப்புக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி

சில தினங்களுக்கு முன்னர் தீபிகா படுகோனின் உடை தொடர்பாக சர்ச்சைக்கு ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்த பிரகாஷ் ராஜ், ““காவி உடை அணிந்து கொண்டு, வெறுப்பு பிரச்சாரம் செய்கின்றனர், சிறுமியை ஒரு சாமியார் பாலியல் வன்கொடுமை செய்கிறார், பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்து வரவேற்கின்றனர். இதெல்லாம் தவறில்லை, ஆனால் ஒரு படத்தில் நடிகை காவி நிற உடை அணிந்தது மட்டும் தவறா? சும்மா கேட்கிறேன்!” என்று பதிவிட்டிருந்தார்.

பதான் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சியில் தீபிகா படுகோனின் காவி நிற பிகினிக்கு பாஜக அமைச்சர்களும், இந்துத்துவ தலைவர்களும் தீர்ப்பு தெரிவித்திருந்தனர். பதான் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும், இப்படம் திரையிடப்படும் திரையரங்குகளை தீ வைத்த்ட்டு எரிக்க வேண்டும் என்று இந்துத்துவ தலைவர்கள் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

காவி நிறத்தில் கவர்ச்சி உடையா?: ஷாருக்கான் – தீபிகா படுகோனே நடித்துள்ள ‘பதான்’ படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் – பாஜக அமைச்சர் எச்சரிக்கை

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனே, ஷாருக் கான் மற்றும் ஜான் ஆபிரஹாமுடன் இணைந்து ‘பதான்’ படத்தில் நடித்திருக்கிறார். ஜனவரி 25-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலில் தீபிகா படுகோனே காவி நிற உடையில் நடனம் ஆடியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த பாடலுக்கு பாஜக அமைச்சர்கள், இந்துத்துவ அமைப்பினரிடமிருந்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது.

ஆட்டுக்குட்டியின் costly வாட்ச் ஆடு மேய்ச்சு வாங்குனதா? இல்ல | Aransei Roast | Annamlai | BJP

தீபிகா படுகோனின் பிகினி சர்ச்சை: “இப்போது கால்பந்து உலகக்கோப்பையை தடை செய்வீர்களா?” – திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ் கேள்வி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்