Aran Sei

அரசியல் எதிரிகளை விமர்சிக்க குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று கூறலாமா?: இயக்குநர் பாக்யராஜிற்கு, டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் தீபக் கேள்வி

Credit: Puthiyathalamurai

ரசியல் எதிரிகளை விமர்சிக்கக் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று சொல்லலாமா? என்று இயக்குநரும் நடிகருமான கே. பாக்கியராஜிற்கு டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் தீபக்நாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

”பிரதமர் மக்கள் நலத்திட்டங்கள் – புதிய இந்தியா 2022” நூல் வெளியிட்டு விழா சென்னை கமலாயலத்தில் நடைபெற்றது. இந்நூலைப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட அவரிடமிருந்து இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் பெற்றுக் கொண்டார்.

இந்தியாவின் சமத்துவமின்மையை அதிகரிக்கும் தனியார்மயம்: தீர்வு என்ன?

அப்போது பேசிய பாக்யராஜ், “எப்படி சென்றாலும் செயல்பட்டாலும் பிரதமர் மோடி மீது விமர்சனங்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது. விமர்சனங்களை எதிர்கொள்ள, பிரதமருக்கு நான் ஒரு சின்ன டிப்ஸ் தருகிறேன். விமர்சனம் பண்றவங்க எல்லாருமே 3 மாசம் குறை பிரசவத்துல பிறந்தவங்கனு நினைச்சுகோங்க. ஏன் 3-மாசம்னு சொல்றேன்னா… 4-வது மாசம்தான் ஒரு சிசுவுக்கு வாய் உருவாகும். 5வது மாசம்தான் காது உருவாகும். வாயும் சரியா வரலை, காதும் சரியா கேட்காதவங்களைதான் 3-வது மாசமே பிறந்த `குறைபிரசவ’ குழந்தைனு சொல்றேன். இப்படியானவங்க நல்லதை அவங்களும் பேசமாட்டாங்க; நல்லது சொன்னா அதை காது கொடுத்தும் கேட்கமாட்டாங்க” என்று கூறியிருந்தார்.

மோடியை விமர்சிப்பவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் – இயக்குநர் பாக்யராஜ்

பாக்யராஜின் இந்த  கருத்திற்கு டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் தீபக்நாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் கருத்தில், “பாக்யராஜ்க்கு மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வலி, அக்குழந்தைகளின் பெற்றோர் வலி தெரியுமா? என்று கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், அரசியல் எதிரிகளை விமர்சிப்பவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என நீங்கள் சொல்லலாமா? என்றும், ஊனமுற்றோரின் இயலாமையை கைக்கொண்டு அதை குறித்து பேசி அரசியல் செய்ய முயற்சிப்பதா?” என்று அவர் கூறியுள்ளார்.

Source: Puthiyathalaimurai  

Kerala Governor ஆகிறாரா H Raja?

 

அரசியல் எதிரிகளை விமர்சிக்க குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று கூறலாமா?: இயக்குநர் பாக்யராஜிற்கு, டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் தீபக் கேள்வி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்