கியான்வாபி மசூதி விவகாரம் போன்ற பிரச்சினைகளுக்கு நவீன இந்தியாவில் இடமில்லை என்று ராஷ்ட்ரிய லோக் தளத்தின் தலைவர் ஜெயந்த் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட இருக்கும் ஜெயந்த் சவுத்ரி, நாளை (மே 30) தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர்,” சௌத்ரி சரண் சிங்கின் நினைவுத் தினத்தை முன்னிட்டு டெல்லியில் ஒரு நிகழ்வு நடைபெற உள்ளது. நாங்கள் (ராஷ்ட்ரிய லோக் தளம்) ‘சமாஜிக் நியாய் மாநாட்டை நடத்துகிறோம். மேலும், மற்ற பிரச்னைகளுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் இருப்பார்கள்.” என்று கூறியுள்ளார்.
தாஜ்மஹாலின் கீழ் பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை பாஜக தேடுகிறது – ஓவைசி கிண்டல்
மேலும், ”நீங்கள் பார்த்தால், இந்த மாதிரியான விவாதங்களை (கியான்வாபி மசூதி போன்ற பிரச்னைகளை) இனி சட்டம் அனுமதிக்காது. நவீன இந்தியாவில் இது போன்ற விவாதங்களை நாம் அனுமதிக்க கூடாது. நாம் கடந்த காலத்தைப் பயன்படுத்தி எதிர்காலத்தை மேலும் குழப்பமானதாக ஆக்கிக் கொள்ள வேண்டாம். இதை தவிர்க்க வேண்டும். நாம் முன்னோக்கி பார்க்க வேண்டும். உண்மையான இந்தியாவின் உண்மையான பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
Source: The Telegraph India
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.