Aran Sei

மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் இறப்பு – உ.பி., முதலிடம்; தமிழகம் இரண்டாமிடம்

சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டிகளை அபாயகரமான முறையில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது ஏற்பட்ட விபத்துகளால் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 330 பேர் உயிரிழந்துள்ளதாக ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

கையால் துப்புரவு செய்வதால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும், நாட்டில் கையால் துப்புரவு தொழிலில் ஈடுபடுபவர்கள்பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை என்றும் ஒன்றிய  அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.

“கையால் துப்புரவு செய்பவர்களாக வேலை செய்ய தடை மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம், 2013 (MS சட்டம், 2013)” பிரிவு 2 (1) (g) இன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளபடி, கையால்  துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் குறித்து தற்போது எந்த அறிக்கையும் இல்லை. 6.12.2013 முதல் கையால் துடைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. மேற்கூறிய தேதியில் இருந்து எந்தவொரு நபரும் அல்லது ஏஜென்சியும் எந்தவொரு நபரையும் கையால் சுத்தம் செய்யவோ அல்லது வேலைக்கு அமர்த்தவோ முடியாது, ”என்று ஒன்றிய அரசின்  சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார்.

விநாயக் சதுர்வேதி எழுதிய இந்துத்துவா மற்றும் வன்முறை என்ற புத்தகம்: இந்துத்துவாவின் தத்துவ கர்த்தா சாவர்க்கரை புரிந்து கொள்வது எப்படி?

பகுஜன் சமாஜ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கிரிஷ் சந்திரா,  நாட்டில் உள்ள கையால் துப்புரவு செய்பவர்களின் நிலைமை மற்றும் அவர்களின் வேலை நிலைகுறித்து கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார்

சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டிகளை அபாயகரமான முறையில் சுத்தம் செய்யும்போது ஏற்பட்ட விபத்துகளால் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 330 பேர் இறந்துள்ளனர் என்று அதாவாலே தெரிவித்துள்ளார் .

அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 47 பேரும், தமிழகத்தில் 43 பேரும், டெல்லியில் 42 பேரும், ஹரியானாவில் 36 பேரும் உயிரிழந்துள்ளனர்.

ஹிஜாப் தடையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு – விசாரிக்க தனி அமர்வு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்ற அறிவிப்பு

“ஸ்வச் பாரத் மிஷனின் கீழ், அக்டோபர் 2, 2014 முதல், கிராமப்புறங்களில் 10.99 கோடிக்கும் அதிகமான சுகாதார கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் நகர்ப்புறங்களில் 62.65 லட்சத்திற்கும் அதிகமான சுகாதார கழிப்பறைகள் சுகாதார கழிப்பறைகளாக மாற்றப்பட்டுள்ளன. கையால் துப்புரவு செய்ய்ம் வழக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இந்த பணி பெரும் பங்களிப்பை அளித்தது,” என்று அத்வாலே தெரிவித்துள்ளார்.

அமைச்சகம் ஒரு தனி பதிலில், கையால் சுத்தம் செய்பவர்களை அங்கீகரித்துள்ளது. கையால் துப்புரவு செய்பவர்களின் மறுவாழ்வுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டத்தின் (SRMS) கீழ், கையால் துப்புரவு செய்பவர்கள் என்று அடையாளம் காணப்பட்டவருக்கு அவர்களின் மறுவாழ்வுக்காக அரசாங்கம் உதவி வழங்குகிறது.

டெல்லி: வலதுசாரிகளின் எதிர்ப்பினால் இஸ்லாமிய சிந்தைனையாளர்கள் குறித்த பாடத்திட்டத்தை நீக்கிய அலிகர் இஸ்லாமிய பல்கலைக்கழகம்

கையால் துப்புரவு செய்பவர் என்றூ அடையாளம் காணப்பட்டவக்கு ஒருமுறை ரூ. 40,000 உதவித் தொகையை அரசாங்கம் வழங்குகிறது .

கையால் சுத்தம் செய்பவர்களுக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் இரண்டு ஆண்டுகள்வரை திறன் மேம்பாட்டுப் பயிற்சியையும், மாதம் ஒன்றுக்கு ரூ.3,000 உதவித்தொகையுடன் வழங்குகிறது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Source: Hindustan Times

பச்சை பொய் சொல்லும் Nirmala Sitharaman | திருப்பி அடித்த PTR | Kanimozhi | Jothimani | 5G Scam

மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் இறப்பு – உ.பி., முதலிடம்; தமிழகம் இரண்டாமிடம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்