சென்னையில் உள்ள பட்டிணம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷ் காவல் மரணம் அடைய காரணமாக இருந்த அதிகாரிகள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சென்னை-பட்டினப்பாக்கம் இளைஞர் விக்னேஷ் காவல்துறையினரின் விசாரணை வதையால் பலியாகியிருக்கிறார். அவருடன் குரூர வதைக்குள்ளான சுரேஷ் என்பவர் சிகிச்சை அளிக்கப்படாமல் சிறைபடுத்தப்பட்டிருக்கிறார். இத்தகைய போக்கை விசிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
காவல் நிலைய விசாரணையில் உயிரிழந்த விக்னேஷூக்கு நீதி வழங்கு – மே பதினேழு இயக்கம் வலியுறுத்தல்
இதற்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.
சென்னையில் காவல்நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணம் – எஸ்.டி.பி.ஐ. கண்டனம்
விக்னேஷூடன் கைது செய்யப்பட்டு காவல் துறையின் விசாரணை வதையால் பாதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருக்கிற இளைஞர் சுரேஷூக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கு – அவரைக் காப்பாற்றுவதற்கு ஆவன செய்ய வேண்டுமாறு மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தனியார்மயத்தினால் கொழுக்கும் முதலாளிகள் | அதிச்சியளிக்கும் Oxfam அறிக்கை
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.