சென்னையில் காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்தவர் காவல்துறை சித்தரவதையால் மரணமடைந்ததாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியிருந்தனர். இந்நிலையில் சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் சென்னை மெரினா கடற்கரையில் குதிரை சவாரி செய்து வந்தார். ஏப்ரல் 18 ஆம் தேதி திங்கள்கிழமை இரவு திருவல்லிக்கேணியில் வசித்து வந்த கட்டிடத் தொழிலாளி சுரேஷ் (28) என்பவருடன் வந்துள்ளார்.
சென்னை: விசாரணையின் போது வாலிபர் மரணம் – காவல் மரணமென குடும்பத்தினர் குற்றச்சாட்டு
காவல் நிலையத்திற்கு இரண்டு பேரை அழைத்து வந்த விசாரணை நடத்தியபோது திடீரென விக்னேஷ்க்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விக்னேஷை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது காவல் மரணம் என்று குடும்பத்தார் தெரிவித்தனர்.
பல்வாறு அரசியல் கட்சித் தலைவர்கள் இம்மரணத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், இவ்வழக்கை வன்கொடுமைத் தடுப்புச் சட்ட்த்தில் வழக்குப் பதிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பல அரசியல் தலைவர்கள் இவ்வழக்கை சிபிசிஐடி விசாரிக்க தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
சென்னையில் காவல்நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணம் – எஸ்.டி.பி.ஐ. கண்டனம்
இந்நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவிட்டதை அடுத்து, சிபிசிஐடி துணைக் கண்காணிப்பாளர் சரவணன் விசாரணையைத் தொடங்கி உள்ளார். அவர் தலைமையிலான சிபிசிஐடி காவல்துறையினர் தலைமைச் செயலகக் காலனி காவல்நிலையத்தில் விசாரணை நடத்தினர். விக்னேஷ் கைது தொடர்பான ஆவணங்களையும் எடுத்துச் சென்றனர். அடுத்தகட்டமாக விக்னேஷின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு Maridhas ஐ கூப்பிட்டு விசாரிக்கணும் Vanchinathan Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.