விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை ’வன்முறை வெறியர்கள்’ எனக் குறிப்பிட்டது தொடர்பாக டிஏவி பள்ளி குழுமம் விளக்கமளித்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள டிஏவி பள்ளியின் 10 வகுப்பு ஆங்கில தேர்வில் கேட்கப்பட்டிருந்த விவசாயிகள் போராட்டம் தொடர்பான கேள்வி சர்ச்சையானதை, தொடர்ந்து, இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
டிஏவி பள்ளி குழுமம் அளித்துள்ள விளக்கத்தில், “அந்தக் கேள்வி தொடர்பாக, எங்களுக்குப் பெற்றோர்கள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பொது மக்களிடம் இருந்து கருத்துக்கள் வந்தன. இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடு என்பதை போல, வந்த கருத்துக்களும் பலதரப்பட்டதாக இருந்ததில் ஆச்சரியமில்லை. கடந்த 50 ஆண்டுகளாக சிறப்பான, மதிப்பு மிக்க கல்வியை வழங்கி வரும் நிறுவனத்திற்கு ஆதரவு அளிப்பதில் தொடங்கி, வெறுக்கத் தக்க கருத்துகள்வரை வந்தன. ஒரு ஆசிரியரால் வடிவமைக்கப்பட்ட கேள்வியின் குறிப்பிட்ட சில சொற்கள், ஒட்டு மொத்த நிறுவனத்தை பிரதிபலிக்காது. எவ்வாறாயினும், கல்வியை பொருத்தமான, சமகால மற்றும் சூழல் சார்ந்ததாக மாற்றுவதில் தொடர்ந்து பாடுபடுவதில் பெருமை கொள்கிறோம். குழந்தைகளிடையே சுயாதீனமான சிந்தனையை வளர்ப்பதன் அவசியத்தை நாங்கள் உறுதியாக நம்புகிறோம், மேலும் இந்திய அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள கொள்கை மற்றும் நெறிமுறைகளுக்கும் கட்டுப்படுகிறோம்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், தனது ட்விட்டர் பக்கத்தில், “இது ஆங்கில பாடத்தேர்வா அல்லது “பிரச்சாரத்தை எழுதுவது எப்படி என்ற தேர்வு எதுவும் நடக்கிறதா?” என டிஏவி பள்ளி விளக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
Is this an English language examination paper or do we now have exams on ‘How to Write Propaganda’? DAV School Gopalapuram pls clarify…. pic.twitter.com/NPTn40mNUL
— Shashi Tharoor (@ShashiTharoor) February 22, 2021
இதுதொடர்பாக, டெல்லி சீக்கிய குருத்வாரா கமிட்டியின் முன்னாள் உறுப்பினர், சென்னையில் டிஏவி பள்ளிகளை நடத்தும் ஆரிய சமாஜ் கல்விச் சங்கத்திற்கு, சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
டிஏவி பள்ளி இயக்குநர், ஆரிய சமாஜ் கல்வி அறக்கட்டளை உறுப்பினர்களுக்குப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பில் எழுதப்பட்டிருக்கும் கடிதத்தில், இந்தச் சம்பவம் தொடர்பாக தங்கள் ஏமாற்றத்தை பதிவு செய்திருப்பதோடு, இந்தக் கேள்வி ’பொருத்தமற்றது’ எனக் கூறியிருப்பதாக, அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திஷா ரவியின் துணிவு இந்தியாவின் மனசாட்சியை உலுக்கட்டும் – அபூர்வானந்த்
”இது போன்ற கேள்வி, கேள்வி கேட்பவர்களை மட்டுமல்லாது முன்னாள் மாணவர்களையும் தவறாக காட்டுகிறது. மாணவர்கள் மத்தியில், முக்கிய மதிப்புகள் மற்றும் மனநிலைகள் கற்பிக்கப்படுவது பற்றிய கவலையும் எழுப்புகிறது” என அந்தக் கடித்ததில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.