Aran Sei

ராஜஸ்தானின் பல பஞ்சாயத்துகளில் கடனை அடைக்காதவர்களின் மகள்கள் ஏலத்தில் விற்பனை – மீறினால் தாய்மார்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்படுவார்கள் என மிரட்டல்

ராஜஸ்தானின் பல மாவட்டங்களில் பெண் குழந்தைகள் விற்கப்படும் விவகாரம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் 8-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடன் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சொத்து தகராறுகளைத் தீர்ப்பதற்காக, சாதிப் பஞ்சாயத்துகள் நடத்தப்படுகிறது. அவ்வாறு பஞ்சாயத்துகள் நடத்தப்படும் போது, கொடுத்த கடனை திருப்பி தராத குடும்பத்தினரின் 8 – 18 வயதிற்குள் உள்ள பெண் குழந்தைகளை ஏலம் விடுகின்றனர்.

கொரானாவால் அதிகம் பாதிக்கப்பட்டது பெண் குழந்தைகள்தான் – சேவ் தி சில்ட்ரன் ஆய்வில் தகவல்

அதுமட்டுமின்றி, சொத்து தகராறில் தோற்கும் தரப்பின் மகள்கள் ஏலம் விடப்படுகின்றனர். இந்த ஏலத்தை சட்டப்பூர்வமாக்க முத்திரைத் தாள்களும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த ஏலத்தில் கலந்து கொண்டவர்களில் அதிக விலைக்கு ஏலம் எடுப்பவர், உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், மும்பை, டெல்லி ஆகிய இடங்களில் உள்ள பல்வேறு விபச்சார விடுதிகளுக்கு பெண்களை கைமாற்றி விற்பனை செய்வதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, சிறுமிகளை ஏலம் விடுவதைத் தடுத்தால், அவர்களின் தாய்மார்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்படுவார்கள் என்ற நிபந்தனையும் உள்ளது.

ராஜஸ்தான் – சாதிய பயங்களால் கல்வியை இழக்கும் பெண் குழந்தைகள்

அந்த வகையில் ஒரு தாய் ரூ.6 லட்சத்திற்காக தனது மகளை 3 முறை விற்ற நிலையில், சிறுமி 4 முறை கர்ப்பமானது தெரியவந்துள்ளது. இது குறித்து பொதுவெளியில் தெரியவர, ஊடகங்களிலிருந்து இது போன்ற செய்திகள் வந்ததையடுத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தன்னிச்சையாக நடவடிக்கை எடுத்தது.

இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் இதுபோன்ற கொடூரமான சம்பவங்களைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நான்கு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய ராஜஸ்தான் தலைமைச் செயலருக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மாடுகள் மீது அக்கறை காட்டப்படுவதைப் போல குழந்தைகள், பெண்கள் மீது காட்டப்படுகிறதா? – மாவட்ட நீதிபதிக்கு குஜராத் உயர்நீதிமன்றம் கேள்வி

இது தொடர்பாக மாநிலத் தலைமைச் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நாட்டின் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு பஞ்சாயத்துகள் என்ன நடவடிக்கைகள் எடுக்கின்றன என்பதை அறிய அரசாங்கத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய நபர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று ராஜஸ்தான் காவல்துறை டிஜிபியிடம் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து, உண்மை அறிக்கையை 7 நாட்களில் தாக்கல் செய்ய ராஜஸ்தான் மாநில மகளிர் ஆணையம் இன்று மாநில காவல்துறை டிஜிபி மற்றும் பில்வாரா மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பெண் திருமண வயது குறித்து சர்ச்சை பேச்சு – காங்கிரஸ் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பிய குழந்தைகள் ஆணையம்

இந்த சம்பவத்தில் உண்மையை கண்டறிய விசாரணை தேவை. இதுபோன்ற தகவல்கள் வெளிவரும் போது, விசாரணை நடக்கும் வரை உண்மையை அறிய முடியாது. ஆனால், ராஜஸ்தான் மாநிலத்தில் பெண் குழந்தைகள் விற்பனை நடப்பதில்லை” என்று ராஜஸ்தான் அமைச்சர் பிரதாப் கச்சாரியாவாஸ் தெரிவித்துள்ளார்.

Source : the quint

ஆட்டுக்குட்டியின் குரங்குச் சேட்டை | குட்டி கரணம் அடிக்கும் சங்கிகள் | Aransei Roast | AnnamalaiBJP

ராஜஸ்தானின் பல பஞ்சாயத்துகளில் கடனை அடைக்காதவர்களின் மகள்கள் ஏலத்தில் விற்பனை – மீறினால் தாய்மார்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்படுவார்கள் என மிரட்டல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்